தாபா ஸ்டைல் மஷ்ரூம் மசாலா: இத மட்டும் சேர்த்து பாருங்க, ஹோட்டல் பக்கம் போகவே மாட்டீங்க!

காளான், முந்திரி விழுது, கஸ்தூரி மேத்தி சேர்த்து வீட்டிலேயே தாபா ஸ்டைல் க்ரீமியான மஷ்ரூம் மசாலா செய்வது எப்படி?
dhaba style mushroom gravy
dhaba style mushroom gravy
Updated on

Dhaba style mushroom gravy: சப்பாத்தி, நாண் அல்லது ஜீரா ரைஸ் செய்தாலே நமக்குத் தொட்டுக்கொள்ள நார்த் இந்தியன் ஸ்டைலில் ஒரு ரிச்சான கிரேவி இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும். வழக்கமாகச் செய்யும் சிக்கன், பன்னீர் கிரேவிகளுக்கு ஒரு சூப்பரான, மாற்றுதான் இந்த 'மஷ்ரூம் மசாலா'. தாபாக்களிலும், பெரிய ரெஸ்டாரண்ட்களிலும் தரப்படும் அந்த க்ரீமியான சுவையையும், மணத்தையும் நம் வீட்டிலேயே எளிதாகக் கொண்டு வர முடியும். 

காளானில் உள்ள புரதச்சத்து உடலுக்கு வலு சேர்க்கும். முந்திரி விழுது மற்றும் வெண்ணெய் சேர்த்துச் செய்யப்படும் இந்த கிரேவி, நாவில் வைத்ததும் கரையும். எந்தவிதமான செயற்கை நிறமூட்டிகளும் இல்லாமல், அசலான வட இந்திய சுவையில் வீட்டிலேயே மஷ்ரூம் மசாலாவை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • காளான் - 200 கிராம்

  • பெரிய வெங்காயம் - 2

  • தக்காளி - 2 

  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

  • முந்திரி - 10

  • காஷ்மீரி மிளகாய்த் தூள் - 1.5 டீஸ்பூன்

  • மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

  • சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்

  • கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

  • கஸ்தூரி மேத்தி - 1 டீஸ்பூன்

  • பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 1

  • எண்ணெய் மற்றும் வெண்ணெய்  - தலா 2 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

  • கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை! 

முதலில் ஒரு பேனில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் விட்டு, நறுக்கிய காளான் துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கிக் கொள்ளுங்கள். காளான் முதலில் நிறைய தண்ணீர் விடும், அந்தத் தண்ணீர் முழுமையாக வற்றி, காளான் லேசாகச் சுருண்டு வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு அதைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் கிரேவியில் காளான் ரப்பர் போல மாறாமல் மென்மையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வயிறு சூட்டைத் தணிக்கும் சூப்பர் ரெசிபி... சத்துகள் நிறைந்த 'குலித் கலான்' செய்வது இவ்வளவு சுலபமா?
dhaba style mushroom gravy

இப்போது ஒரு அடிகனமான கடாயில் எண்ணெய் மற்றும் மீதமுள்ள வெண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்துத் தாளிக்க வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, நல்ல பொன்னிறமாக மாறும் வரை பொறுமையாக வதக்குங்கள். 

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்து, அதோடு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் மற்றும் சீரகத் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள். மசாலாக்களில் இருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை வதக்குவதுதான் நார்த் இந்தியன் கிரேவியின் ரகசியம்.

தக்காளி மசாலா சுருண்டு எண்ணெய் பிரிந்து வந்ததும், அடுப்பை முற்றிலும் குறைத்து வைத்துவிட்டு, நாம் அரைத்து வைத்துள்ள முந்திரி விழுதைச் சேர்த்துக் கிளறவும். முந்திரி விழுதுதான் கிரேவிக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் தடிமனான பதத்தைக் கொடுக்கும். கிரேவிக்குத் தேவையான அளவு உப்பைச் சேர்த்து, சுமார் முக்கால் கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வையுங்கள். குழம்பு நன்றாகக் கொதித்து வரும்போது, வதக்கி வைத்துள்ள காளானை இதில் சேர்க்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
இப்படி செஞ்சு கொடுங்க!காளான் பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட தட்டையே காலி பண்ணுவாங்க!
dhaba style mushroom gravy

காளான் மசாலாவோடு சேர்ந்து 5 நிமிடங்கள் கொதித்ததும், கரம் மசாலா மற்றும் கைகளை வைத்துக் கசக்கிய கஸ்தூரி மேத்தியைத் தூவுங்கள். கடைசியாகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைத்தால் 'நார்த் இந்தியன் மஷ்ரூம் மசாலா' தயார்.

logo
Kalki Online
kalkionline.com