ஸ்வீட் கார்ன் - வெள்ளைப்பூசணி: குழந்தைகளின் வளர்ச்சியை தூண்டும் சூப்பர் காம்போ!

கண் பார்வை மற்றும் உடல் குளிர்ச்சிக்கு உதவும் அற்புதமான இயற்கை உணவுகள்!
ஆரோக்கியமான உணவு
ஆரோக்கியமான உணவுAI image
Updated on

உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஆரோக்கியமான உணவு

ஸ்வீட் கார்ன் குழந்தைகளுக்கு உடலுக்கு சக்தி தரும், அதில் உள்ள சத்துக்கள் கண் பார்வைக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது. வெள்ளைப்பூசணி உடலுக்கு குளிர்ச்சி தரும், ஜீரணத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும். இந்த இரண்டும் சேர்ந்தது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் ஆரோக்கியமான உணவாகும்.

ஸ்வீட் கார்ன் + வெள்ளைப் பூசணி சேர்த்து செய்த அடை மற்றும் கட்லெட் ரெசிபி இதோ..

ஸ்வீட் கார்ன் – வெள்ளைப் பூசணி அடை

தேவையான பொருட்கள்:

ஸ்வீட் கார்ன் – 2 கப்

வெள்ளைப் பூசணி – 1 கப்

பச்சரிசி – 1 கப்

பச்சை மிளகாய் – 4

பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – 1 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு – 2 கப்

சீரகம் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

ஸ்வீட் கார்னை உரித்து தனித்தனியாக பிரித்து எடுத்து வைக்கவும். பச்சரிசியை அரைமணி நேரம் ஊறவைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் பச்சரிசி, வெள்ளைப் பூசணி, சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும். பின்னர் ஸ்வீட் கார்ன் மற்றும் சீரகம் சேர்த்து ஒரு நிமிடம் சுற்றி எடுத்து பாத்திரத்தில் வைக்கவும்.

ஆரோக்கியமான உணவு
ஆரோக்கியமான உணவுAI image

அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து மெல்லிய அடைகளாக தட்டி, இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும். சூடாக தக்காளி பஜ்ஜியுடன் அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.

ஜீரணத்தை சீராக்கும் ஆரோக்கியமான உணவு ஸ்வீட் கார்ன் – வெள்ளைப் பூசணி கட்லெட்

தேவையான பொருட்கள்:

ஸ்வீட் கார்ன் – 1 கப்

துருவிய வெள்ளைப் பூசணி – 1 கப்

வேகவைத்து மசித்தது உருளைக்கிழங்கு – 1 கப்

பிரெட் தூள் – ½ கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் – ¼ கப்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2 No

சீரகம் ஒரு டீஸ்பூன்

மிளகு தூள் – ½ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஸ்வீட் கார்னை ஒரு கைப்பிடி தனியாக எடுத்து வைத்து விட்டு மீதம் உள்ளதை தண்ணீர் சேர்க்காமல் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முழு கார்ன், மற்றும் அரைத்த விழுதை சேர்த்து பூசணி, மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய், சீரகம், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதையும் படியுங்கள்:
நாவிற்கு விருந்தாகும் சுவையான மாம்பழ போலி! நீங்களும் ட்ரை பண்ணுங்க!
ஆரோக்கியமான உணவு

சிறிய உருண்டைகளாக பிடித்துக் பின் கட்லெட்களாக தட்டிக்கொள்ளவும். தட்டிய கட்லெட்களை பிரெட் தூளில் புரட்டி, தவாவில் எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறலாம். ஸ்கூல் விட்டு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு டேஸ்டான மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம்.

இயற்கை காய்கறிகளின் சத்துக்களை உணவில் சேர்ப்பதன் மூலம், குழந்தைகளின் உடல் வளர்ச்சியை ஊக்குவித்து, அவர்களைச் சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்குப் பழக வைக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com