

'பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்' என்ற பழமொழிக்கு ஏற்ப பசி வந்தால் நாம் அனைவரும் அனைத்து விஷயங்களையும் மறந்துவிடுவோம். அவ்வாறு நாவிற்கு விருந்தளிக்கும் உணவுப்பொருட்களில் இனிப்பு வகை என்றாலே அனைவருக்கும் அலாதி விருப்பம்.
சாதாரணமாக செய்யும் போலியைவிட இவ்வாறு மாம்பழத்தில் போலி செய்வது மிகுந்த சுவையுடையதாக இருக்கும். கடைகளில் போலி வாங்கி சாப்பிடுவதைக் காட்டிலும் நாம் வீட்டிலேயே மாம்பழத்தைக் கொண்டு செய்வது ஒரு புதுவிதமான சுவையில் நன்றாக இருக்கும்.
மாம்பழ போலி செய்யத் தேவையான பொருட்கள் என்னென்ன?
மாம்பழம் - 1
கோதுமை மாவு - 1 கப்
மைதா மாவு - அரைக்கப்
உப்பு - தேவையானஅளவு
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
நெய் -தேவையான அளவு
ரவை - அரை கப்
சர்க்கரை - 1 கப்
பசும்பால் - 1 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
சுவையான மாம்பழ போலி தயாரிக்கும் ரகசிய செய்முறை:
போலிக்கான மாவு தயார் செய்தல்
ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவிற்கு ஏற்ப கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து `நன்கு கலந்துகொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு நீர் ஊற்றி போலி செய்வதற்கு ஏற்றவாறு இலகுவாக பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவின் மீது சிறிதளவு நெய் தடவி பத்து நிமிடங்கள் அப்படியே மூடிவைக்க வேண்டும்.
போலி செய்வதற்கான பூரணம் செய்தல்
வாணலியில் தேவையான அளவு நெய் ஊற்றி மிதமான வெப்பத்தில் ரவையைச் சேர்த்து நன்கு கிளறிக்கொடுக்க வேண்டும். ரவையின் நிறம் மாறிவிடக்கூடாது மனம் வரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் பழுத்த மாம்பழத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வறுத்த ரவையில் மாம்பழக் கலவை சேர்த்து தேவையான அளவு சர்க்கரை, ஒரு கப் பசும்பால் சேர்த்து கட்டி இல்லாமல் அடி பிடிக்காதவாறு கிளறி கொடுக்க வேண்டும்.
இதில் இறுதியாக ஒரு பின்ச் உப்பு, ஏலக்காய் பொடி சிறிதளவு நெய் ஊற்றி நன்கு கிளறி பூரண பக்குவம் வரும் வரை கிளறிக்கொடுக்க வேண்டும். மாம்பழ போலி செய்வதற்கான பூரணம் தயார்.
மாம்பழ போலி செய்தல்
நாம் பிசைத்து வைத்திருந்த மாவை உருட்டி நடுவில் குளியாக்கி பூரணத்தை அதில் வைத்து மாவின் மூலம் நன்கு மூடி சப்பாத்தி கட்டையில் நன்கு கைகளால் தேய்த்துக்கொள்ள வேண்டும். தோசை கல்லில் தேவையான அளவு நெய் ஊற்றி மாம்பழப் போலியை போட்டு நெய் ஊற்றி இரண்டு புறமும் சிவந்து வரும்படி மிதமான வெப்பத்தில் மிருதுவாக வேகவைத்து எடுக்க வேண்டும்.
சுவையான கமகமக்கும் மாம்பழ மணம் வீசும் மாம்பழ போளி தயார். இதில் சேர்த்துள்ள பசும்பால், நெய், மாம்பழம் இவற்றின் சுவையுடன் இதனை சேர்த்து உண்ணும்போது மிகுந்த சுவையுடையதாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்தமான இனிப்பு உணவு பொருளாக இந்த மாம்பழ போலி இருக்கும். இது ஒரு புதுவிதமான சுவையில் மிகவும் நன்றாக இருக்கும்.
இந்த செய்முறையைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் ஆரோக்கியமற்ற கடையில் வாங்கும் பலகாரங்களைத் தவிர்த்து, வீட்டில் சுத்தமான மற்றும் சத்தான மாம்பழ போலியை உருவாக்கி, உங்கள் குடும்பத்தினரின் நாவிற்கு விருந்தளித்து மகிழ்வீர்கள்.