
தட்டைப்பயறு சாதம்
தேவையான பொருட்கள்:
தட்டைப்பயறு _3/4 கப்
கடலைப்பருப்பு _1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு_ 1 ஸ்பூன்
கடுகு _1 ஸ்பூன்
எண்ணெய் _2 ஸ்பூன்
மிளகு _ ½ ஸ்பூன்
சீரகம் _1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் _2 (நறுக்கியது)
பூண்டு _7 பற்கள் (சதைத்தது)
பச்சை மிளகாய் 4
கருவேப்பிலை _ சிறிது
உப்பு _ 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய்தூள் 11/2 ஸ்பூன்
தக்காளி _ 3 (நறுக்கியது)
தண்ணீர் _3 கப்
பச்சரிசி _1 கப்
நெய் _1 ஸ்பூன்
மல்லித்தழை _ஒரு கைப்பிடி
செய்முறை: முதலில் தட்டைப்பயறை 2 மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, மிளகு மற்றும் சீரகம் போட்டு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், சதைத்த பூண்டு பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலை சேர்த்து கலந்து வதங்கியதும் ஊறவைத்த தட்டைப்பயறை சேர்த்து கலந்துவிட்டு உப்பு, மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து தக்காளி மிருதுவாகும் வரை வதங்கி வெந்ததும் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் ஒரு மணி நேரம் ஊறிய அரிசியை சேர்த்து கலந்து விடவும்.
பிறகு உப்பு சரிபார்த்து கடைசியாக நெய், மல்லித்தழை சேர்த்து கலந்துவிட்டு குக்கரை மூடிபோட்டு 3 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். ஆவி அடங்கியதும் மூடியை திறந்து சிறிது பிரட்டி விட்டு எடுத்து சாப்பிட்டால் பிரமாதமான சுவையாக இருக்கும்.
துவர்ப்பு சுவை கொண்ட அத்திக்காய் வடை
அத்திக்காயின் உள்ளே குட்டி பூச்சிகள் இருப்பதால் முதலில் அதை நான்காக வெட்டி கல்லுப்பு, மஞ்சள்த்தூள் சேர்ந்த தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
தேவையான பொருட்கள்:
அத்திக்காய் _ 1/4 கிலோ
கடலைப்பருப்பு _1 கப்
துவரம்பருப்பு _1 கப்
பட்டை, இலவங்கம், சோம்பு (பொடித்தது) 2 ஸ்பூன்
இஞ்சி _1 துண்டு
மல்லித்தழை _ 1 கைப்பிடி
எண்ணெய் _பொரிக்க தேவையானது
வெங்காயம் _ 2 (பொடியாக நறுக்கியது)
செய்முறை; முதலில் உப்பு தண்ணீரில் போட்டு வைத்த அத்திக்காயை சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளை 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஊற வைத்த பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதே ஜாரில் சுத்தமாக கழுவி வைத்த அத்திக்காயை தண்ணீரை நன்கு வடித்து விட்டு போட்டு துருவல் மாதிரி அரைத்து பருப்பு கலவையுடன் சேர்க்கவும்.
அடுத்து பட்டை லவங்க பொடியை சேர்த்து, பச்சை மிளகாய், தட்டி வைத்த இஞ்சி, மல்லித்தழை, வெங்காயம் சேர்த்து வடை மாவு பக்குவத்தில் விரவி வைத்து கொள்ளவும்.
பின்னர் எண்ணெய் சட்டையை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடைகளை தட்டிப் போட்டு ஒரு பக்கம் பொரிந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிடவும். இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து போன்ற பல வகையான சத்துக்கள் நிறைந்த அத்திக்காய் வடை தயார்.