
காலை உணவில் 60 சதவிகிதம் மாவு சத்தும், புரதங்கள் நிறைந்ததாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமாக இருக்க உதவும். இரவு அதிகமான பசி இருந்தால் சூப் போன்ற சக்தி தரும் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அதையும் இரவு 8 மணிக்குள் எடுத்துக் கொள்வது நல்லது.
இரவு உணவில் எண்ணெயில் பொரித்த பண்டங்கள், தேவையற்ற சர்க்கரை பொருட்கள், செரிமானமாக அதிகநேரம் எடுக்கும் மசாலா பொருட்கள் நிறைந்த உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.
சத்தான உணவு:
சத்தான உணவு என்பது கீரைவகைகள் பச்சை காய்கறிகள் பழங்கள் சால்மன் மீன் உலர் பழங்கள் பாதாம் முந்திரி திராட்சை வால்நட் போன்ற உலர் பழங்கள் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உணவு முறையில் கவனம் அவசியம்.
ஆரோக்கியமான உணவு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் விட்டமின்கள் நார் சத்துக்கள் புரதம் போன்றவை இருக்குமாறு பார்த்துக்கொள்ள உடல் நோய் இன்றி ஆரோக்கியமுடன் இருக்கும்.
நாம் எடுத்துக்கொள்ளும் பெரும்பாலான உணவுகள் விதை அடிப்படையிலான உணவுகளாகும். சோளம், கோதுமை, அரிசி போன்ற தானிய உணவுகள், பருப்பு வகைகள் என எடுத்துக் கொண்டால் பீன்ஸ், பட்டாணி போன்றவையும், எள், நிலக்கடலை, சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துக்களையும் தாவர உணவுகளாக எடுத்துக்கொள்கிறோம் இவை அனைத்த்திலுமே சக்தி மிகுந்துள்ளதால் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்
சமச்சீர் உணவு:
சமச்சீர் உணவு என்பது நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், விட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது நம் உடல் சரியாக செயல்பட தேவையானதாகும். மெலிந்த புரதங்கள் ஆரோக்கியமான கொழுப்புகள் முழு தானியங்கள் காய்கறி பழவகைகள் போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்வது சமச்சீரான உணவு என்று அழைக்கப்படும்.
பாரம்பரிய உணவு:
பாரம்பரிய உணவு என்பது தலைமுறை தலைமுறையாக வழி வழியாக வரும் உணவுகளாகும். இவை பல தலைமுறைகளாக நம் முன்னோர்கள் அதன் ஆரோக்கிய நன்மையை அறிந்து எடுத்துக்கொண்ட உணவாகும். இவை தேசத்திற்கு தேசம் மாறுபடுவதும், பிராந்திய உணவு, உள்ளூர் உணவு என பல வகையில் பாரம்பரிய உணவுகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பாரம்பரிய உணவுகள் மற்றும் பானங்கள் பொதுவாக வீட்டில் தயாரிக்கப்பட்டவையாக, ஆரோக்கியம் நிறைந்தவையாக உள்ளன.
சரிவிகித உணவு:
நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்ட சத்துக்களையும் சரியான அளவில் வழங்கும் உணவு முறையே சரிவிகித உணவு முறையாகும். பால், பால் பொருட்கள், பருப்பு வகைகள், தானியங்கள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகள் போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்வது சரிவிகித உணவாகும்.
துரித உணவு:
துரித உணவுகள் விரைவாக சமைத்து வழங்கக்கூடிய உணவை குறிக்கும். துரித உடனடி உணவுகள் குளிர்விக்கப்பட்ட அல்லது உறைந்த நிலையில் இருப்பதால் சுவை குறைவதுடன் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும். இதனை எடுத்துக் கொள்ளுவதன் மூலம் ஆரோக்கியம் கேள்விக்குறியாகும்.
துரித உணவில் சோடியம் அதிகமாக உள்ளது. இவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதய செயலிழப்பு போன்ற இதய நிலைகளை மோசமாக்கும் தன்மை கொண்டது.
கொழுப்பு சத்து நிறைந்த அதிகம் தீங்கு விளைவிக்கும் துரித உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் தவிப்பது நல்லது. அத்துடன் சாலையோர உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. தமிழர்களின் பாரம்பரிய உணவு என்பது பழைய சோறும், வெண் பொங்கல் இட்லி, தோசை போன்றவைதான் தமிழர்களின் முதன்மையான உணவாகும்.