
பச்சைநிற காய்கறி புலாவ்
தேவை:
பாஸ்மதிஅரிசி _2 கப்
தேங்காய்பால் _1/2 கப்
கிராம்பு _10
தேங்காய்எண்ணை _ 2 டீஸ்பூன்
அன்னாசி_1
இலவங்கப்பட்டை _1 அங்குலம்
பிரின்சிஇலை _1
ஏலக்காய் _ 3
ப்ரொக்கோலி மொட்டுகள் _ 2 கப்
பச்சை குடைமிளகாய் துண்டுகள் _2 கப்
சீமைசுரைக்காய் துண்டுகள் _2கப்
வெங்காயம் மெல்லிய ஸ்லைஸ்கள் _ 1 கப்
பச்சைமிளகாய் __2 (நறுக்கியது)
இஞ்சி _1 அங்குலம் (நறுக்கியது)
பூண்டு _4 பற்கள் (நறுக்கியது)
ஜாவித்ரி _1 டீஸ்பூன்
மசாலாபொடி _1 டீஸ்பூன்
மல்லிஇலை _ஒரு கைப்பிடி (நறுக்கியது)
அலங்கரிக்க:
பிஸ்தா, பாதாம் தலா _1/2 கப் (வறுத்தது)
உப்பு
பேஸ்ட்:
தேங்காய்துண்டுகள் _1/4 கப்
பச்சைமிளகாய் _1
மல்லிஇலை _ ¼ கப்
பொட்டுக்கடலை_ 2 டீஸ்பூன்
செய்முறை:
மிதமான நெருப்பில் வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணை சூடு செய்து 3 நிமிடம். பேஸ்ட் பொருட்களை சேர்த்து வறுக்கவும். பின்னர் வறுத்த பொருட்களை ½ கப் நீரில் 10 நிமிடம் ஊறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 4கப் நீரில் அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைத்து களைந்து வடிக்கவும். பச்சை நிற காய்கறிகளை கோதிக்கும் வெந்நீரில் 4 நிமிடங்கள் மூழ்கவைத்து பின் வடித்து ஐஸ் தண்ணீரில் மூழ்கவைத்து வடிக்கவும்
ஒரு வாணலியில் மிதமான தீயில் 3 டீஸ்பூன் எண்ணை சூடு பண்ணி சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், ஸ்டார் அன்னாசி, சேர்த்து 2 -3 நிமிடம் வறுத்த பின் வெங்காயம் சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும். பூண்டு பச்சை மிளகாய் சேர்க்கவும். பின்னர் ஊற வைத்து வடித்த அரிசி சேர்த்து 3 நிமிடம் வறுக்கவும். வாணலியில் வதங்கியப் பொருட்களை குக்கரில் சேர்த்து 4 கப் தண்ணீர் , ½ கப் தேங்காய் பால் சேர்த்து, உப்பு, ஜாவித்ரி, பேஸ்ட் சேர்த்து கிளறி குக்கரை மூடி ஆன் செய்க. சாதம் 90% வெந்த பின், சுத்தப்படுத்தி வைத்த காய்கறிகளை சேர்த்து கிளறவும். பிறகு மசாலா பொடி சேர்த்து கிளறி குக்கரை மூடவும். 5 நிமிடம் கழித்து சாதம் வெந்த பின் தீயை அணைத்து விடவும். புலாவ் பூ போல இருக்கும்.
பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி, பிஸ்தா., பாதாம் மேலே தூவி அலங்கரிக்க. சுவை சத்து மிகுந்த புலாவ் ருசிக்க தயார். பச்சடி, வறுவல் கூட வைத்துக் கொள்ளலாம்.
வெள்ளை குறுமா
தேவை:
காய்கறிகள் _1 கப்
துருவியதேங்காய் _1 கப்
பொட்டுக்கடலை _2 ஸ்பூன்
முந்திரி _5
சோம்பு _1 ஸ்பூன்
பச்சை மிளகாய் _2
வெங்காயம் _1
இஞ்சி பூண்டு விழுது _1 ஸ்பூன்
எண்ணெய் _2 ஸ்பூன்
உப்பு _ தேவைக்கு
பட்டை ,ஏலக்காய், பிரிஞ்சி இலை தலா _1
கிராம்பு _3
செய்முறை:
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். அத்துடன் வெங்காயம் சேர்த்து வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் காய்கறிகளையும் சேர்த்து வதக்கி லேசாக வதங்கியதும் தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
மிக்ஸி ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, முந்திரி, சோம்பு, பச்சைமிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.. அரைத்த விழுதை வெந்த காய்கறியுடன் சேர்த்து கலந்து நன்றாக கொதித்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும். இப்போது சுவையான சத்தான வெள்ளை குருமா தயார்.