சத்தான கொழுக்கட்டையும், முருங்கைக் கீரை தோசை!

ராகி கொழுக்கட்டை...
ராகி கொழுக்கட்டை...

முருங்கை கீரை ராகி கொழுக்கட்டை!


தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 1 கப்

துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் 

முருங்கை இலை - 1கப்

ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

பச்சை மிளகாய் - 4

உப்பு - தேவையான அளவுஇதயத்தை பலப்படுத்தும் ஆத்தாப் பழம்!

இதையும் படியுங்கள்:
இதயத்தை பலப்படுத்தும் ஆத்தாப் பழம்!
ராகி கொழுக்கட்டை...

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து ராகி மாவை அதில் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் ராகி மாவுடன் துருவிய தேங்காய், 

முருங்கை இலை, ஏலக்காய் பொடி, பச்சை மிளகாய் , உப்பு சேர்த்து  தண்ணி தெளித்து, பிசைந்து கொழுக்கட்டை செய்து இட்லி பானையில் நான்கு நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சத்தான சுவையான முருங்கை இலை ராகி கொழுக்கட்டை தயார்.

பின் குறிப்பு: உப்பு மிளகாய் தவிர்த்து , வெல்லம் சேர்த்து இனிப்பு கொழுக்கட்டையும் செய்யலாம்.

முருங்கை கீரை தோசை!

முருங்கை கீரை தோசை
முருங்கை கீரை தோசை

தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி - 2 கப்

உளுத்தம் பருப்பு - 1/4 கப்

முருங்கை இலை  - 1/4 கப்

இஞ்சி - 1 துண்டு 

 பச்சை மிளகாய் - 2

 வெங்காயம் - 1

 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியையும், உளுத்தம்பருப்பையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைத்து , ஒன்றாக அரைத்து உப்பு சேர்த்து 8 மணி நேரம் குளிக்க வைக்கவும். 

முருங்கை இலை இஞ்சி பச்சை மிளகாய் மிக்ஸியில் அரைத்து இதனுடன் கலந்து வெங்காயத்தை நறுக்கி போட்டு நன்றாக கலக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பு போட்டு சூடானதும், தோசையாக ஊற்றி சூடாக சாப்பிடவும். சத்தான சுவையான முருங்கை இலை தோசை ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com