சத்துக்கள் நிறைந்த பாசிப்பருப்பு இட்லி: எளிமையான செய்முறை!

Simple recipe
Healthy pasipparuppu idly
Published on

புரதம் நிறைந்த பாசிப்பருப்பில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு நல்லது.  பாசிப்பருப்பில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும். கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை வழங்குவதால் கர்ப்பிணி பெண்களுக்கு பாசிப்பருப்பு ஒரு சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவாகும். வயிற்றுப்புண்ணை போக்கக்கூடிய பாசிப்பருப்பை சமையலில் குறிப்பாக கூட்டு, பொரியலில் சேர்த்து செய்வதும், இட்லி, புட்டு என செய்து சுவைப்பதும் ஆரோக்கியமானது. 

பாசிப்பருப்பு இட்லி:

பாசிப்பருப்பு ஒரு கப்

பச்சை மிளகாய் 2 

சீரகம் 1/2 ஸ்பூன் 

இஞ்சி ஒரு துண்டு 

கொத்தமல்லி சிறிது 

கறிவேப்பிலை சிறிது 

எண்ணெய் 2ஸ்பூன் 

உப்பு தேவையானது 

ஈனோ சால்ட் 1 ஸ்பூன்

பாசிப்பருப்பை தண்ணீர் விட்டு நன்கு கழுவி இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு மிக்ஸியில் பச்சை மிளகாய், சீரகம், இஞ்சித் துண்டு சிறிது, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்கவும்.

அரைத்தமாவில் தேவையான உப்பு, ஈனோ சால்ட் கலந்து உடனடியாக இட்லி வார்க்கலாம். இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை ஊற்றி ஐந்தாறு நிமிடங்கள் வேகவைத்து எடுக்க சத்தான, மிகவும் ருசியான பாசிப்பருப்பு இட்லி தயார். மிகவும் சாஃப்டான இட்லி புளிக்க வைக்காமலேயே கிடைத்துவிடும்.

விருப்பப்பட்டால் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், 10 உடைத்த முந்திரிப் பருப்பு துண்டுகள் சேர்த்து தாளித்துக்கொட்டி மாவில் கலந்து இட்லி வார்க்கலாம்.

பச்சை மிளகாய் சாம்பார்: 

என்னது பச்சை மிளகாயில் சாம்பாரா என்று திகைக்க வேண்டாம். ருசி அபாரமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சுண்டைக்காயை வெறுப்பவர்களையும் சாப்பிட வைக்கும் 4 அசத்தல் ரெசிபிகள்!
Simple recipe

துவரம் பருப்பு 1/4 கப் 

கத்தரிக்காய் 1 

தக்காளி 1

புளி சிறிய எலுமிச்சையளவு

சின்ன வெங்காயம் 6 

பூண்டு 4 பற்கள் 

பச்சை மிளகாய் 10 

உப்பு தேவையானது 

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன் வெந்தயப் பொடி 1/4 ஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 ஸ்பூன்

தாளிக்க: கடுகு,  பச்சை மிளகாய் 1, கறிவேப்பிலை சிறிது

துவரம் பருப்பை வாணலியில் லேசாக சூடு பண்ணி குக்கரில் குழைவாக வேக விடவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். கத்திரிக்காய், தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சின்னத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை நீர்க்க கரைத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், கீறிய பச்சை மிளகாய், தக்காளி, கத்திரிக்காய் போன்றவற்றை சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் புளிக்கரைசலை சேர்த்து தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். புளி வாசனை போனதும் குழைவாக வெந்த பருப்பை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலையை தூவவும்.

இதையும் படியுங்கள்:
வேகமான வாழ்க்கைக்கான ஒரு நிமிட ரெசிபிகள்!
Simple recipe

வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் தேங்காய் துருவலை 2 ஸ்பூன் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து சாம்பாரில் கொட்டி கலந்துவிடவும். மணக்க மணக்க இட்லிக்கு தோதான சாம்பார் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com