
சோயா பீன்ஸ் தோசை
தேவை:
சோயா பீன்ஸ் - 2கப்
கேரட் - 1
முள்ளங்கி - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
அரிசி மாவு - 4 ஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கேரட், முள்ளங்கியை துருவிக்கொள்ளவும்.சோயா பீன்ஸை வெது வெதுப்பான தண்ணீரில் சுமார் 2 மணி நேரங்கள் ஊறவைக்கவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும். மிக்சி ஜாரில் ஊறிய சோயா பீன்ஸை போட்டு, அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரிசி மாவு, துருவிய கேரட், முள்ளங்கி, சீரகம், வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து கல் சூடானதும் சிறிது எண்ணெய் தடவி, மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்து பரிமாறவும். சுவையான, சத்தான தோசை ரெடி.
********
சோயா பீன்ஸ் அல்வா
தேவை:
சோயா பீன்ஸ் - 250 கிராம் சர்க்கரை - 500 கிராம்
நெய் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன் குங்குமப்பூ - சிறிது
செய்முறை:
சோயா பீன்ஸை ஆறு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு தோலை எடுத்துவிட்டு, தண்ணீரைக் களைந்து, மிக்ஸியில் அரைத்து, தண்ணீர் விட்டு பிசைந்து பால் எடுக்கவும். சர்க்கரையை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். தயாரித்த பாலை அடுப்பில் வைத்து சுண்டக்காய்ச்சி, கூழ் போல் வரும்போது சர்க்கரை பாகையும், நெய்யையும் விட்டுக்கிளறவும். பிறகு இதனுடன் ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி பரப்பி, ஆறிய பின் வில்லைகள் போடவும். சுவையான, சத்தான சோயா பீன்ஸ் அல்வா ரெடி.
******
சோயா பீன்ஸ் சுண்டல்
தேவை:
சோயா பீன்ஸ் - 200 கிராம்
தேங்காய்த் துருவல் - அரை கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை
செய்முறை:
சோயா பீன்ஸை ஆறு மணிநேரம் ஊறவைத்து, வேகவைத்து, வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து தாளிக்கவும். கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்துக்கிளறவும். சுவையான, சத்தான சோயா பீன்ஸ் சுண்டல் ரெடி.
******
சோயா பீன்ஸ் இட்லி
தேவை:
சோயா பீன்ஸ் – ஒரு கப்
சாமை அரிசி – ஒரு கப்
உளுத்தம்பருப்பு – அரை கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சோயா பீன்ஸ், சாமை அரிசி இரண்டையும் கழுவி, ஒன்று சேர்த்து 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் இட்லி மாவுப் பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
உளுந்துடன் வெந்தயம் கலந்து அரைமணி நேரம் தனியாக ஊறவைத்து, அவற்றையும் மாவாக அரைத்துக்கொள்ளவும். பிறகு இந்த இரண்டு மாவுகளையும் ஒன்றுசேர்த்து, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து, 2 மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு மாவை இட்லிகளாக ஊற்றி வேகவைக்கவும். அல்டிமேட் சுவையில் சோயா பீன்ஸ் இட்லி தயார்.