நட்ஸ் வடை!

நட்ஸ்  வடை!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on


தேவை:
முந்திரி, பாதாம், பிஸ்தா  - தலா 50 கிராம்,
கடலைப் பருப்பு - கால் கப்
துவரம் பருப்பு - 1 கப்
வற  மிளகாய் - 3
உடைத்த உளுந்து - 4 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
இஞ்சித் துருவல்  - 1 ஸ்பூன்.

செய்முறை:

முந்திரி, துவரம் பருப்பு, பாதாம், பிஸ்தா,  உடைத்த உளுந்து   மற்றும் கடலைப் பருப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சுமார் அரை மணி நேரம் ஊறவைத்து கொள்ளுங்கள்.

ஊறிய பிறகு, உப்பையும், காய்ந்த மிளகாயையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், கொத்தமல்லி, நறுக்கிய கறிவேப்பிலை,இஞ்சித் துருவல், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை இத்துடன் சேர்த்துப் பிசைந்து கொள்ளுங்கள்.

பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுத்தால் சுவையான, சத்தான நட்ஸ் வடை தயார்.

logo
Kalki Online
kalkionline.com