ஆரஞ்சு பழத்தில் சட்னியா? பரவாயில்லையே நல்லா இருக்கே! 

Orange Chutney Recipe
Orange Chutney Recipe
Published on

நமது இந்திய உணவுகளில் சட்னி என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. இனிப்பு, புளிப்பு, காரம் என பல வகைகளில் செய்யப்படும் சட்னிகளை, இதுவரை பருப்பு மற்றும் கீரைகளைப் பயன்படுத்திய செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் என்றாவது பழங்களைப் பயன்படுத்தி சட்னி செய்ய முயற்சித்ததுண்டா?

 இன்று அப்படி ஒரு சட்னிதான் நாம் செய்யப் போகிறோம். அதுவும் ஆரஞ்சு பழத்தைப் பயன்படுத்தி. ஆரஞ்சு பழத்துடன் மசாலா பொருட்களை இணைத்து செய்யப்படும் இந்த சட்னி, உண்மையிலேயே சூப்பர் சுவையில் இருக்கும். சரி வாருங்கள் அதை எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

  • 3 ஆரஞ்சு பழம்

  • சர்க்கரை - சிறிதளவு

  • எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு

  • கடுகு - ½ ஸ்பூன் 

  • சீரகம் - ½ ஸ்பூன் 

  • மிளகாய் தூள் - ½ ஸ்பூன் 

  • இஞ்சி - சிறிதளவு

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் ஆரஞ்சு பழங்களை உரித்து, அதன் விதைகளை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

அடுத்ததாக அடுப்பில் கடாய் ஒன்று வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

பின்னர் ஆரஞ்சு துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடம் அப்படியே வதக்குங்கள். இப்போது சர்க்கரையை கொஞ்சமாக மேலே தூவி நன்கு கிளறவும். 

இதையும் படியுங்கள்:
உப்பு சமையலுக்கு மட்டும்தானா? வேறு எதெற்கெல்லாம் பயன்படுகிறது பார்ப்போமா?
Orange Chutney Recipe

பின்னர் உங்கள் தேவைக்கு ஏற்ப மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறியதும், குறைந்த வெப்பத்தில் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் மூடி போட்டு வேக விடுங்கள். இறுதியில் சட்னி கெட்டியான பதத்திற்கு வந்ததும் அதை நன்கு கிளறிவிட்டு இறக்கினால், இனிப்பு, புளிப்பு, காரம் என எல்லாம் கலந்த சூப்பர் சுவையில் ஆரஞ்சு சட்னி தயார். 

இதை பிரட்டுக்கு ஜாம் போலவும் சாப்பிடலாம். அல்லது சமோசா, பக்கோடா போன்ற தின்பண்டங்களுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். சாண்ட்விச் செய்யும்போது அதிலேயும் பயன்படுத்தலாம். 

இதை ஒருமுறை முயற்சித்துப் பார்த்து உங்களுடைய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com