குஜராத்தி சுவையில் பாலக் ரோல்ஸ்: ஈஸியாக செய்யலாம்!

Palak Rolls
Palak Rolls with Gujarati Flavor..
Published on

தேவையானவை:

பாலக் கீரை ஒரு கட்டு

கடலை மாவு 2 கப்

அரிசி மாவு 1 கரண்டி

இஞ்சி பச்சை மிளகாய் விழுது 1 ஸ்பூன்

ஓமம் 1 ஸ்பூன்

காரப்பொடி 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

தனியா போடி 1/2 ஸ்பூன்

சீரகத்தூள் 1/2 ஸ்பூன்

பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

உப்பு தேவைக்கேற்ப.

எலுமிச்சை சாறு 1முழு பழம்.

வெல்லம் சிறிது. (optional)

செய்முறை :

பாலக் கீரையை காம்பு நீக்கி இலைகளை சைஸ் வாரியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மிக சிறிய இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடலை மாவுடன் மற்ற பொருட்களை கலந்து ஒரு பேஸ்ட் போல எடுத்துக் கொள்ளவும்.

பெரிய இலைகளை அடியில் மற்ற இலைகளை மேலும் அடுக்கி இலைகளின் இரண்டு பக்கமும் பேஸ்ட் இருக்குமாறு தடவி சுருட்டிக்கொள்ளவும்.

4 அல்லது 5 லேயேர்கள் போதுமானது. பெரிய இலைகளின் மீது பேஸ்ட் தடவி சுருட்டிய பின் மீந்திருக்கும் பேஸ்ட்டில் பொடியாக நறுக்கி வைத்த இலைகளை கலந்து கொண்டு, ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதில் இந்த மாவை ஊற்றவும்.

இட்லி பாத்திரத்தில் நீர் ஊற்றி அது சூடானதும்,சுருட்டி வைத்துள்ள இலைகளையும்,தட்டில் கொட்டிய மாவையும் இட்லி போல வேகவிடவும்.

வெந்த இலைகளை சிறிது நேரம் ஆற விட்டு,குறுக்கு வாக்கில் 1' கனமான பீஸ் களாக நறுக்கவும். இதே போல இட்லி போல வெந்த பாலக் ம்... சிறு சிறு துண்டுகளாக போட்டுக் கொள்ளவும்.

ஒரு அகலமான கடாயில்,எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை,பெருங்காயம் ,வெள்ளை எள்ளு தாளிக்கவும். அதில்,நறுக்கி வைத்துள்ள பாலக் ரோல்ஸ் பீஸ் களை பொறுமையாக அடுக்கி,மெல்லிய தீயில் இரண்டு பக்கமும் மொறு மொறு என ஆகும் படி வறுக்கவும்.

இதையும் படியுங்கள்:
இஞ்சி ஊறுகாயுடன் சுவைக்க... கொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்!
Palak Rolls

பின் குறிப்பு :

பாலக் இல்லையெனில் வேறு எந்த கீரையையும் பொடியாக நறுக்கி செய்து கொள்ளலாம்.

எலுமிச்சை சாறுக்கு பதிலாக புளி கரைத்த நீர் சேர்க்கலாம்.

மாலை நேர சிற்றுண்டி ஆகவோ, பார்ட்டி நேர ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com