
பனீர் பட்டர் மசாலா -Paneer Butter Masala recipes
தேவையான பொருட்கள்:
பனீர் - ஒன்னரை கப்
முந்திரி -அரை கப்
நறுக்கிய வெங்காயம்- 11/2 கப்
நறுக்கிய தக்காளி- இரண்டு கப்
தயிர்- அரை கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 டீஸ்பூன்
மிளகு -அரை டீஸ்பூன்
கரம் மசாலா -அரை டீஸ்பூன்
மிளகாய் தூள்- ஒரு டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள்- ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
பட்டர் -ஒரு டேபிள் ஸ்பூன்
ஏட்டுடன் கலந்த பால் -கால் டம்பளர்
எண்ணெய் -ஒரு டீஸ்பூன்
மல்லித்தழை -கைப்பிடி அளவு
பட்டை - சிறு துண்டு
உப்பு -தேவைக்கு ஏற்ப
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் இவற்றை நன்றாக கலந்து அதனுடன் பன்னீரை சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும்.
முந்திரிப் பருப்புடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு புரட்டி வைத்த பனீர் துண்டங்களை இரண்டு பக்கமும் பொன்னிறமாக வறுத்து எடுத்துவைக்கவும்.
அகலமான ஒரு கடாயை அடுப்பில் வைத்து அது காய்ந்தவுடன் பட்டரை போடவும். பின்னர் பட்டை, மிளகு, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு அரைத்த தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். கூடவே மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, கரம் மசாலா, உப்பு அனைத்தையும் சேர்த்து ஏடுடன் கலந்த பால் சேர்த்துக்கிளறி மிதமான தீயில் ஐந்து நிமிடம் மூடிவைக்கவும். பின்னர் பொரித்து வைத்த பனீர் துண்டங்களை மசாலாவுடன் சேர்த்துக்கிளறி மல்லித் தழை தூவி இறக்கவும். இதனை சப்பாத்தி, பரோட்டா, நாண், ருமாலி ரோட்டியுடன் சேர்த்து சாப்பிட ஹோட்டல் ருசியில் அசத்தும். முதல் முறை செய்யும்பொழுது சற்று நேரம் பிடிக்கும். அடிக்கடி செய்தால் எளிதாக செய்து விடலாம்.
பால் பூரி - paal poori
தேவையான பொருட்கள்:
மைதா, ரவை, சர்க்கரை- தலா ஒரு கப்
பால்- ஒரு லிட்டர்
ஏலப் பொடி- கால் டீஸ்பூன்
பாதாம், முந்திரி ப்ளேக்ஸ் -ஒரு டேபிள் ஸ்பூன்
நெய்- ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு தேவைக்கு ஏற்ப.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா, ரவையைப் போட்டு அதில் நெய் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். இதை ஈரத்துணிகள் சுற்றி ஒரு மணி நேரம் ஊறவிடவும். பாலை சுண்டக் காய்ச்சி அதில் சர்க்கரை, ஏலப்பொடி கலந்து பாதாம், முந்திரி ப்ளேக்ஸை சேர்த்து இறக்கவும்.
பின்னர் துணியில் சுற்றி வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி பூரி போல இட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதை சூடாக பாலில் போட்டு எடுத்து தட்டில் தனியாக அடுக்கவும். மீதமுள்ள பாலை அடுக்கிய பூரிகளின் மேல் ஊற்றி மேலே சிறிது பாதாம், முந்திரி ப்ளேக்ஸ் தூவி அலங்கரிக்கவும்.
பர்த்டே பார்ட்டிக்கு வரும் குழந்தைகள் இந்த பால் பூரியின் மீது சிறிதளவு தேனை ஊற்றி அதன் மீது பாதாம் முந்திரி ப்ளேக்ஸ் தூவி சாப்பிடுகிறார்கள். ஆதலால் குழந்தைகளுக்கு கொடுக்க விரும்புபவர்கள் ஒரு கிண்ணத்தில் தேனையும், பாதாம் முந்திரி, ப்ளேக்ஸையும் தனியாக எடுத்து வைத்துவிடவும்.