என் புருஷன் கேட்டாரு, "ஏன் இவ்ளோ அழகா ஆயிட்ட?" - காரணம் இந்த நைட் டின்னர் தான்!

low calorie dinner
low calorie dinner
Published on

கலோரி குறைவான உணவுகளில் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், மெலிந்த புரதங்கள், முழு தானியங்கள் ஆகியவை அடங்கும். குறைந்த கலோரி உணவுகளை அதிக கலோரி கொண்ட உணவுகளுக்கு பதிலாக உட்கொள்வது ஆரோக்கியமான எடை மேலாண்மைக்கு உதவும்.

1) குறைந்த கலோரி இரவு உணவை (low calorie dinner) ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

குறைந்த கலோரி இரவு உணவு எடை குறைப்பிற்கு உதவுகிறது. அத்துடன் உடலுக்குத் தேவையான சத்துக்களையும் வழங்குகிறது. குறைந்த கலோரிகளை உட்கொள்ளுவதன் மூலம், உடல் ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாமல் எடையை குறைக்கவும் முடிகிறது.

குறைந்த கலோரி உணவுகள் அதன் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து காரணமாக நிறைவாக வைத்திருக்க உதவுகின்றன.

செரிமானத்திற்கு உதவும் குறைந்த கலோரி உணவுகள் செரிமானம் செய்வதற்கு குறைந்த ஆற்றலை செலவழித்தால் போதும். இது செரிமான மண்டலத்தின் பணியை சீராக்குகிறது.

உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தேர்வு செய்து எடுத்துக் கொள்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடிகிறது.

2) எளிதான குறைந்த கலோரி இரவு உணவு சமையல் குறிப்புகள்:

  • வெள்ளரிக்காய், பீட்ரூட், தக்காளி, கேரட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை பயன்படுத்தி காய்கறி சாலட்கள் செய்து சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள்:
குறைவான கலோரி; நிறைவான ஊட்டச்சத்து கொண்ட 5 உணவுப் பொருள் எவை தெரியுமா?
low calorie dinner
  • ப்ரோக்கோலி, காலிபிளவர், பயறுகள் கொண்டு வயிற்றுக்கு இதம் தரும் சூப் தயாரித்து சாப்பிடலாம்.

  • ஓட்ஸ், பார்லி, குயினோவா, சம்பா கோதுமை போன்ற முழு தானியங்கள் நார்ச்சத்து நிறைந்தவை. அவை நீண்ட நேரம் நம்மை நிறைவாக உணர வைக்கும்.

3) குறைந்த கலோரி இரவு உணவின் (low calorie dinner) நன்மைகள்:

குறைந்த கலோரி இரவு உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகக் கூடியவை. இரவு உணவை லேசாகவும் எளிதாக ஜீரணிக்க கூடியதாகவும் வைத்திருப்பது செரிமான மண்டலத்தின் சுமையை குறைத்து இரவு நேரத்தில் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.

  • குறைந்த கலோரி உணவுகள் எடை குறைப்புக்கு வழிவகுக்கும். இதனால் உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

  • இரவு உணவுகள் வயிற்றுக்கு இடம் தரும் வகையில் இருப்பதால் ஆரோக்கியமான, நிம்மதியான உறக்கத்திற்கு வழி வகுக்கும்.

  • குறைந்த கலோரி இரவு உணவை தேர்ந்தெடுக்கும் பொழுது புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது அவசியம். இவை நமக்குத் தேவையான ஊட்டச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

  • நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் போன்ற உடல் பருமன் தொடர்புடைய பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

  • சத்தான நார்ச்சத்து, புரதம் நிறைந்த உணவுகள் பசியை கட்டுப்படுத்தி நிறைவான உணர்வை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
இளைஞர்களுக்குத் தேவை அதிக புரதம்; குறைந்த கலோரி - சூப்பர் உணவுகள்!
low calorie dinner

4) குறைந்த கலோரி இரவு உணவு தயாரிப்பதற்கான குறிப்புகள்:

  • டோஃபு போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள் இரவு உணவுக்கு ஏற்றவை.

  • சமைக்கும் முறைகளில் வறுப்பதற்கு பதிலாக வேக வைத்தல், கிரில் செய்தல் அல்லது நீராவி மூலம் சமைத்தல் போன்ற முறைகளை பின்பற்றலாம்.

  • சமையலில் பயன்படுத்தும் எண்ணையின் அளவை குறைக்கலாம்.

  • இனிப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக சோடியம் உள்ள உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான சுவையூட்டிகளை பயன்படுத்தலாம்.

  • முழு தானியங்கள், வண்ணமயமான காய்கறிகள் மற்றும் பழங்கள் இரவு உணவில் இடம் பெறுவது சமச்சீரான மற்றும் சத்தான உணவுக்கான வழியாகும்.

  • ராகி போன்ற தானியங்கள், கஞ்சி, சூப் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.

  • தூங்குவதற்கு இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை முடித்துக் கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com