

நார்த் இந்தியன் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் லபாப்டர் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.பன்னீர் 250 கிராம்
2.தக்காளி 2
3.வெங்காயம் 1
4.இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
5.பட்டர் 2 டேபிள் ஸ்பூன்
6.எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
7.மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்
8.தனியா தூள் 1 டீஸ்பூன்
9.மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
10.கரம் மசாலா தூள் ½ டீஸ்பூன்
11.ஃபிரஷ் கிரீம் 2 டேபிள் ஸ்பூன்
12.முந்திரி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
13.உப்பு தேவையான அளவு
14.ஃபிரஷ் மல்லி இலைகள் 15
செய்முறை:
தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கவும். தோலுரித்து மிக்ஸியில் அடித்து ப்பூரி (Puree) யாக்கிக் கொள்ளவும். பன்னீரை ஒரு அங்குல துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் பட்டர் சேர்த்து சூடாக்கவும். அதில் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு சேர்க்கவும். பின் தக்காளி ப்பூரியை கலக்கவும்.
கலவை கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவை சேர்த்து கிளறி விடவும். பின் அதில் முந்திரி பேஸ்ட் மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக கலந்துவிடவும். மேற் பரப்பில் கிரீமை ஊற்றி மல்லி இலைகளை தூவி இறக்கவும். சுவையான பன்னீர் லபாப்டர் தயார். ரொட்டி, நான், சாதம் போன்றவற்றுடன் சேர்த்து உண்ண ஏற்றது.
பலாக் கொட்டை-தஹினி ஹம்முஸ் (Jackfruit seed-thahini Hummus) ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.பலாக் கொட்டை 2 கப்
2.வறுத்த பூண்டு 1
3.லெமன் 1-2
4.உப்பு தேவையான அளவு
5.தஹினி (வறுத்த எள்ளுப் பேஸ்ட்) 2 டேபிள் ஸ்பூன்
6.ஆலிவ் ஆயில் 5 டேபிள் ஸ்பூன்
7.ஐஸ் வாட்டர் ½ கப்
செய்முறை:
பலாக்கொட்டைகளை ஆவியில் வேகவைத்து எடுத்து, பின் கடாயில் போட்டு வறுக்கவும். ஆறவிட்டு தோலை உரித்துக்கொள்ளவும். லெமனிலிருந்து ஜூஸை பிழிந்து கொள்ளவும். பலாக்கொட்டைகளை நறுக்கி மிக்ஸியில் போடவும். அதனுடன் உப்பு, பூண்டு, தஹினி, லெமன் ஜூஸ் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கட்டியில்லாமல் நைஸ் பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவும்.
ரொம்ப கெட்டியாக இருந்தால் தேவையான அளவு ஐஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். சுவையான பலாக்கொட்டை-தஹினி ஹம்முஸ் தயார். இது பாரம்பரிய ஆர்மீனிய உணவு வகைகளில் ஒன்றான லாவாஷ் (Lavash) எனப்படும் ரூமாலி ரொட்டி போன்ற மெல்லிய தட்டையான ரொட்டி (Flatbread) க்கு சைட் டிஷ்ஷாக பரிமாறப்படுகிறது. நீங்களும் இதை தயாரித்து சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டுப் பாருங்களேன்.