பசலைக் கீரை கூட்டு

பசலைக் கீரை கூட்டு
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

ஜெயா சம்பத், கொரட்டூர்.

தேவை:

துவரம் பருப்பு – 100 கிராம்

சீரகம் -1 ஸ்பூன்

கடுகு கால் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் -4

உளுந்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,

சின்ன வெங்காயம் -10

பச்சை மிளகாய் -3

தக்காளி -1

பசலைக் கீரை – 2 கட்டு

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.

உப்பு , எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

துவரம் பருப்பை குழைய வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், பச்சை மிளகாய் சேர்க்கவும். பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி போட்டு, வதக்கவும். நறுக்கிய பசலைக் கீரையைச் சேர்க்க வும். கீரை வெந்ததும், மஞ்சள் தூள், உப்பு, வெந்த துவரம் பருப்பு சேர்த்துக் கிளறவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்துப் பொரித்து, கீரையில் சேர்க்கவும். சுவையான, சத்து மிகுந்த பசலைக் கீரைக் கூட்டு உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்

logo
Kalki Online
kalkionline.com