
பீ நட் சாலட் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.வேக வைத்த பச்சை வேர்க்கடலை பருப்பு 100 கிராம்
2.பெரிய வெங்காயம் 1 (நறுக்கியது)
3.பச்சை மிளகாய் 2 (நறுக்கியது)
4.தக்காளி 2 (நறுக்கியது)
5.நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டுகள் ¼ கப்
6.மாதுளை முத்துக்கள் ¼ கப்
7.ஃபிரஷ் கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி
8.லெமன் ஜூஸ் ¾ டீஸ்பூன்
9.சாட் மசாலா 1½ டீஸ்பூன்
10.உப்பு தேவையான அளவு
செய்முறை:
மேலே கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒரு பெரிய பௌலில் போட்டுக் கலந்து பரிமாறவும். சுவையும் சத்தும் நிறைந்த சாலட். இந்த சாலடை, வேர்க்கடலை பருப்பிற்குப் பதில் வேக வைத்த பாசிப்பயறு, கொண்டைக்கடலை போன்ற பிற பயறு வகைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தியும் தயாரிக்கலாம்.
காளான் வடை ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.சன்னா டால் 100 கிராம்
2.வேர்க்கடலை பருப்பு 100 கிராம்
3.நறுக்கிய பெரிய வெங்காயம் 1
4.பூண்டுப் பற்கள் 8
5.தோல் சீவி நறுக்கிய இஞ்சித் துண்டுகள் 2 டீஸ்பூன்
6.நறுக்கிய பச்சை மிளகாய் 2
7.பெருஞ் சீரகம் 1 டீஸ்பூன்
8.பட்டன் காளான் கால் கிலோ
9.கறிவேப்பிலை 2 இணுக்கு
10.உப்பு தேவையான அளவு
11.பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய்
செய்முறை:
காளான்களை சுத்தம் செய்து, உப்பு நீரில் கழுவவும். பின் பொடியாக நறுக்கவும். நறுக்கியதை, வெறும் வாணலியில் போட்டு நீர்ச்சத்து நீங்கும் வரை வதக்கி எடுக்கவும். சன்னா டால், வேர்க்கடலை பருப்பு இரண்டையும் ஒருமணி நேரம் ஊறவைக்கவும்.
பின் மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும். அதனுடன் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். பிறகு, வதக்கி வைத்த காளான், கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, வடைகளை தட்டிப் போட்டு சுட்டு எடுக்கவும். குளிர் காலத்திற்கு ஏற்ற சுவையான காளான் வடை ரெடி!