மிளகு சாதம் என்பது எளிமையாக செய்யக்கூடிய ஒரு சுவையான உணவாகும். இது வெறும் சுவையானது மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. மிளகு உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. மிளகு சாதத்தில் நீங்கள் எதுபோன்ற பொருட்களை சேர்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அதன் ஊட்டச்சத்து மதிப்பு மாறுபடும். இந்தப் பதிவில் அனைவரும் விரும்பி சாப்பிடும் மிளகு சாதம் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி: 1 கப் (சுமார் 2-3 பேருக்கு)
மிளகு தூள்: 1 டீஸ்பூன்
சீரகம்: 1/2 டீஸ்பூன்
கடுகு: 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை: சிறிதளவு
பச்சை மிளகாய்: 2-3 (உங்கள் சுவைக்கேற்ப)
வெங்காயம்: 1 (நடுத்தர அளவு)
எண்ணெய்: 2 டேபிள்ஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை நன்கு கழுவி போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள். அரிசி வெந்ததும் தண்ணீரை வடித்து சாதத்தை தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின்னர், அதில் வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கவும். அடுத்ததாக மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து வறுத்து, பின்னர் வேகவைத்த அரிசியை சேர்த்து நன்கு கலக்கவும்.
இதில் உங்களது தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கலக்கினால் சுவையான மிளகு சாதம் தயார். இந்த ரெசிபி செய்வது உண்மையிலேயே மிகவும் எளிது. ஒருமுறை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மிளகு சாதத்தின் ஆரோக்கிய நன்மைகள்:
மிளகில் உள்ள பொருட்கள் செரிமானத்தை எளிதாக்கி வயிற்றுப்புண் மற்றும் வாயு தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கிறது. இதில் உள்ள ஆன்ட்டிஆக்ஸிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. மிளகு ஒரு சிறந்த வலி நிவாரணையாக செயல்படுகிறது. இதனால், தலைவலி, மூட்டு வலி போன்றவை விரைவில் குணமடையும். மிளகில் உள்ள காரமான பொருட்கள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.
மிளகு சாதம் என்பது சுவையாக இருப்பது மட்டுமின்றி நமது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. மேலே குறிப்பிட்ட வழிகளைப் பின்பற்றி இதை வீட்டிலேயே எளிதாகத் தயாரித்து சாப்பிட்டு வந்தால், நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.