
பைனாப்பிள் ரசவாங்கி
ரசவாங்கி என்பது கர்நாடகா ஸ்பெஷல். இது குழம்பிற்கும் கூட்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கும். பைனாப்பிள் மற்றும் மசாலா பொருட்களுடன் தயாரிக்கப்படும் இது. இனிப்பு, புளிப்பு, காரம் என எல்லா சுவையும் கலந்து மிகவும் அருமையாக இருக்கும்.
பைனாப்பிள் துண்டுகள் 2 கப்
புளி சிறிய எலுமிச்சையளவு
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
வெல்லம் விருப்பப்பட்டால
வறுக்க வேண்டிய பொருட்கள்:
தனியா 2 ஸ்பூன்
பட்டை சிறு துண்டு
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 4
வெந்தயம் 1/4 ஸ்பூன்
பெருங்காயம் சிறிது
தேங்காய்த் துருவல் 1/2 கப்
கறிவேப்பிலை சிறிது
புளியை நீர்க்கக் கரைத்து வைக்கவும். பைனாப்பிளை தோலை சீவி பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் சிறிது விட்டு தனியா, பட்டை, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து சிவக்க வறுத்து, கடைசியாக தேங்காய்த் துருவலையும் சேர்த்து வறுத்து ஆறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் நீர்க்க கரைத்த புளியுடன் நறுக்கிய பைனாப்பிள் துண்டுகளை சேர்த்து தேவையான உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்கவிடவும். பைனாப்பிள் துண்டுகள் நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடி சேர்த்து விருப்பப்பட்டால் வெல்லம் சிறிது போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். மிகவும் ருசியான பைனாப்பிள் ரசவாங்கி தயார். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
பைனாப்பிள் சாலட்
பைனாப்பிள் துண்டுகள் ஒரு கப் வெள்ளரிக்காய்
தக்காளி
வெங்காயம் விருப்பப்பட்டால்
உப்பு
ட்ரெஸ்ஸிங் செய்ய:
மிளகுத்தூள்
புதினா
எலுமிச்சை சாறு
அன்னாசி பழத்தை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். வெள்ளரிக்காய், தக்காளியையும் சிறிய துண்டுகளாக நறுக்கவும். 10 புதினா இலைகளை பொடியாக நறுக்கி வைக்கவும். ட்ரெஸ்ஸிங் செய்ய எலுமிச்சைசாறு சிறிது பிழிந்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, அன்னாசி பழ துண்டுகளை சேர்த்து பொடியாக நறுக்கிய புதினா இலைகளையும் போட்டு எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை உடனடியாகவும் சாப்பிடலாம் அல்லது குளிர்சாதனப்பெட்டியில் வைத்து குளிர்ந்த பின்பும் சாப்பிடலாம். புத்துணர்ச்சியூட்டும் ஆரோக்கியமான சாலட் இது.
வறுத்த பைனாப்பிள்
அன்னாசி பழத் துண்டுகள் 1 கப்
காஷ்மீரி மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
உப்பு 2 சிட்டிகை
சாட் மசாலா 1/2 ஸ்பூன்
சர்க்கரை 1/2 ஸ்பூன்
வெண்ணெய் 1 ஸ்பூன்
அன்னாசி பழத்தை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், சாட் மசாலா, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கலந்துகொள்ளவும்.
அடுப்பை பற்ற வைத்து கிரில் தவாவை சூடேற்றவும். வெண்ணை சிறிது போட்டு கலந்து வைத்துள்ள அன்னாசித்துண்டுகளை வைத்து ஐந்து நிமிடங்களுக்கு இரண்டு பக்கமும் பிரட்டி எடுக்க கிரில்டு பைனாப்பிள் தயார்.