
மரவள்ளிக்கிழங்கு அப்பளம்:
தேவை:
மரவள்ளிக்கிழங்கு - அரை கிலோ
ஜவ்வரிசி - அரை கிலோ
அரிசிமாவு - 100 கிராம்
மிளகாய்த் தூள் - 4 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஜவ்வரிசியைச் சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். மசித்த கிழங்குடன் ஜவ்வரிசி மாவு, மிளகாய்ப் பொடி, உப்பு, காயம் கலந்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
பின்னர் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அரிசி மாவில் தொட்டு அப்பளமாக இடவும். இந்த அப்பளங்களை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளவும். சூப்பர் சுவையில் மரவள்ளிக்கிழங்கு அப்பளம் ரெடி.
******
செந்தாமரைப்பூ அப்பளம்
தேவை:
சிவப்பு தாமரைப்பூ - 2,
உளுந்த மாவு - 100 கிராம்,
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்,
வெள்ளை மிளகுத் தூள் - 1 ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
தாமரைப்பூவின் இதழ்களைத் தனித் தனியாகப் பிரித்துக்கொள்ளுங்கள். உளுந்தமாவில் பெருங்காயத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாமரைப்பூவின் ஒவ்வோர் இதழையும், மாவில் தோய்த்துப் போட்டுப் பொரித்தெடுங்கள். வித்தியாசமான சுவையில் செந்தாமரைப் பூ அப்பளம் ரெடி.
******
ஹோம்மேட் அரிசி அப்பளம்
தேவை:
பச்சரிசி - 200 கிராம் ஜவ்வரிசி - 50 கிராம் தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்
அரிசி மாவு - சிறிதளவு தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசியுடன் ஜவ்வரிசி சேர்த்து மெஷினில் மாவாக அரைத்துச் சலிக்கவும். அதனுடன் சீரகம், உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கலக்கவும். பிறகு சிறிதளவு தண்ணீர்விட்டுப் பிசைந்து உருண்டைகளாக்கி, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். அதனுடன் தேங்காய் எண்ணெய், எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கைபொறுக்கும் சூட்டில் நன்கு பிசையவும். மாவை ஈரத்துணியால் அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, தட்டி அரிசி மாவு தோய்த்து மெல்லிய அப்பளங்களாக இட்டு, வெயிலில் காயவைத்து எடுக்கவும். நன்கு காய்ந்த பிறகு சூடான எண்ணெயில் பொரிக்கலாம்.
*******
புதினா அப்பளம்
தேவை:
அரிசி மாவு - ஒரு கப்
ஜவ்வரிசி மாவு - கால் கப்
புதினா - ஒரு கட்டு
சீரகம் - ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது - 2 ஸ்பூன்
அரிசி மாவுடன் ஜவ்வரிசி மாவு, புதினா, உப்பு, சீரகம் மற்றும் மிளகாய் விழுதை சேர்த்து கலக்கவும்.
இந்தக் கலவையை தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு பிசையவும். பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கட்டையால் மெல்லியதாக தேய்க்கவும்.
தேய்த்த அப்பளங்களை வெயிலில் காய வைக்கவும். காய்ந்ததும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான புதினா அப்பளம் ரெடி.