Rabdi Recipe
Rabdi Recipe

வட இந்தியாவில் பிரபலமான Rabdi செய்யலாம் வாங்க! 

இனிப்புகள் என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது ஜிலேபி, லட்டு, குலோப் ஜாமுன், அல்வா போன்றவைதான். ஆனால் வட இந்தியாவில் இருந்து வந்த ரப்டி அதன் தனித்துவமான சுவை மற்றும் எளிமையான தயாரிப்பு முறையால் இந்தியாவில் எல்லா இடங்களிலும் பிரபலமடைந்து வருகிறது. நீங்கள் இதற்கு முன்னர் இதைப் பற்றி கேள்விப்பட்டதில்லை என்றால் பால் மற்றும் சர்க்கரையைப் பயன்படுத்தி நீங்களே எளிதாக வீட்டில் செய்து விடலாம். இந்த பதிவில் ரப்டி எப்படி செய்வது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

  • பால் 1 லிட்டர் 

  • சர்க்கரை 1/2 கப் 

  • ஏலக்காய் தூள் ¼ ஸ்பூன்

  • பாதாம் (அலங்கரிக்க)

செய்முறை: 

ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பால் கொதிக்கும் போது அதை கிளறிக்கொண்டே இருங்கள். மேற்பரப்பில் உருவாகும் பாலாடையை பாலோடு சேர்த்து அவ்வப்போது கலக்கி விடவும். இவ்வாறு பால் பாதி அளவு குறையும் வரை தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும். 

பால் கெட்டியானதும் தீயை குறைத்து மெதுவாகக் கிளுருங்கள். இறுதியில் பால் நன்கு கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சர்க்கரை மற்றும் ஏலக்காய்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதை அப்படியே எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து ஓரளவுக்கு குளிர்ந்ததும், பாதாம் பருப்பை நறுக்கி மேலே அலங்கரித்து பரிமாறினால் வட இந்தியாவின் ஸ்பெஷல் ரப்டி தயார். 

இதையும் படியுங்கள்:
ஒமேகா 6 கொழுப்பு அமிலம் எந்தெந்த உணவுகளில் உள்ளன தெரியுமா?
Rabdi Recipe

குறிப்புகள்: ரப்டி சுவையாக இருப்பதற்கு கொழுப்பு அதிகம் நிறைந்த பாலை பயன்படுத்துங்கள். பால் கொதிக்கும்போது அதை தொடர்ந்து கிளறிக் கொண்டே இருப்பது மிகவும் முக்கியம். பால் அடிப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ரப்டி அதிகம் கெட்டியாகாமல் இருக்க சர்க்கரையை அடுப்பில் இருந்து இறக்கியதும் சேர்க்கவும். ரப்டிக்கு கூடுதல் சுவையூட்ட நறுக்கிய பிஸ்தா, கிஸ்மிஸ் அல்லது சர்க்கரை தூளை மேலே தாவலாம். 

பால் மற்றும் சர்க்கரை இருந்தால் போதும் இந்த ரப்டி இனிப்பை கொஞ்ச நேரத்தில் செய்துவிடலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையைப் பின்பற்றி நீங்களும் இதை வீட்டிலேயே முயற்சித்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

logo
Kalki Online
kalkionline.com