வட இந்திய ஸ்டைல் ரப்ரி மால்புவா - உங்கள் வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம்!

malpua-and-jackfruit-payasam
malpua-and-jackfruit-payasam
Updated on

தேவையான பொருட்கள்

ரப்ரி செய்வதற்கு :

1.பால் 1 லிட்டர்

2.சர்க்கரை 1 கப்

3.குங்குமப் பூ ½ டீஸ்பூன்

4.பிஸ்தா பருப்பு 1 டீஸ்பூன்

5.பாதாம் பருப்பு 1 டீஸ்பூன்

6.ஏலக்காய் பவுடர் 1 டீஸ்பூன்

சர்க்கரைப் பாகு செய்ய:

1.சர்க்கரை 2 கப்

2.தண்ணீர் 2 கப்

3.குங்குமப் பூ 1 டீஸ்பூன்

4.ஏலக்காய் பவுடர் 1 டீஸ்பூன்

5.துருவிய பாதாம் பருப்பு 2 டீஸ்பூன்

மால்புவா செய்வதற்கு:

1.மைதா 1 கப்

2.ரவை ¼ கப்

3.இனிப்பு சேர்க்காத கோவா ½ கப்

4.பவுடராக்கிய சர்க்கரை 2 டீஸ்பூன்

5.பெருஞ்ஜீரகம் 1 டீஸ்பூன்

6.தண்ணீர் 1 கப்

7.நெய் 2 கப்

செய்முறை (ரப்ரி):

ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்கவைக்கவும். அதில் சர்க்கரையை சேர்த்துக் கலக்கவும். பிறகு அதில் குங்குமப் பூ, பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு மற்றும் ஏலக்காய் பவுடர் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நெகிழும் தன்மையுடன் கெட்டியான பதம் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.

சர்க்கரைப் பாகு செய்முறை:

சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். சர்க்கரை முழுவதும் கரைந்தவுடன் குங்குமப் பூ, ஏலக்காய் பவுடர், பாதாம் பருப்பு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து பாத்திரத்தை இறக்கிவிடவும்.

இதையும் படியுங்கள்:
குட்டீஸ்களுக்கு ஜில்லென்று ஒரு சர்ப்ரைஸ்: வீட்டிலேயே செய்யலாம் விதவிதமான பாப்ஸிகல்!
malpua-and-jackfruit-payasam

மால்புவா செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, கோவா, சர்க்கரை பவுடர் மற்றும் பெருஞ்ஜீரகம் ஆகியவற்றைப் போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கிரீம் போன்ற பதம் வரும்ரை கலந்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் நெய்யை ஊற்றி சூடானதும், தயாரித்து வைத்துள்ள மால்புவா கலவையை ஒவ்வொரு டேபிள் ஸ்பூன் அளவில் எடுத்து ஊற்றி நெய்யில் வேகவிடவும்.

மால்புவாவின் ஓரம் சிவந்து வரும்போது எடுத்து சர்க்கரைப் பாகில் முழுகும் வரை போட்டு 10-15 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு வெளியில் எடுத்து ஒவ்வொரு மால்புவா மீதும் ரப்ரி வைத்து, மேற் பரப்பில் சீவிய பாதாம் மற்றும் பிஸ்தா துண்டுகளைத் தூவி பரிமாறவும். வட இந்தியாவில் 3000ஆண்டுகள் பழமை வாய்ந்த மால்புவா என்ற பாரம்பரிய இனிப்பின் தற்போதைய பரிணாம வளர்ச்சியடைந்த நிலை இது.

பலாப்பழப் பாயசம் ரெசிபி

தேவையான பொருட்கள்:

1.கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிய பலாப்பழம் 2 கப்

2.வெல்லம் 1½ கப்

3.நெய் 3 டேபிள் ஸ்பூன்

4.ஆல்மண்ட் பவுடர் ¼ கப்

5.பால் 2 கப்

6.ஏலக்காய் பவுடர் ½ டீஸ்பூன்

7.முழு முந்திரி பருப்பு 12

8.உலர் திராட்சை 1 டேபிள் ஸ்பூன்

9.சிறு பற்கள் சைஸில் நறுக்கிய தேங்காய் 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் பலாப்பழத் தூண்டுளைப் போட்டு லேசாக வதக்கி எடுக்கவும். அதே கடாயில் மேலும் சிறிது நெய் சேர்த்து தேங்காய் துண்டுகள், முந்திரி மற்றும் உலர் திராட்சை பழங்களை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்

கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் சிறு தீயில் வைத்து கரைய விடுங்கள். பின் கல் இல்லாமல் பிரித்து வடிகட்டி வெல்லப் பாகை தனியே வையுங்கள்.

இதையும் படியுங்கள்:
காலை உணவில் பனீர் – ஆரோக்கியத்தின் இனிய தொடக்கம்!
malpua-and-jackfruit-payasam

இன்னொரு பாத்திரத்தில் வதக்கிய பலாப் பழத்துண்டுகளைப் போட்டு ஒரு கப் பால் ஊற்றி அடுப்பில் வைத்து மீடியம் தீயில் வேகவிடுங்கள். அவை வெந்ததும் ஆல்மண்ட் பவுடர் சேர்க்கவும். மேலும் ஒரு கப் பால் சேர்த்து நன்கு கிளறி கொதிக்கவிடவும். பின் வெல்லப் பாகு சேர்த்துக் கலக்கவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து கொதிக்கும்போது, நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகள், முந்திரி மற்றும் உலர் திராட்சை பழங்களை சேர்க்கவும். அடுப்பில் இருந்து இறக்கி ஏலக்காய் பவுடர் சேர்த்து, பின் பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com