காலை உணவில் பனீர் – ஆரோக்கியத்தின் இனிய தொடக்கம்!

paneer-breakfast-recipes
paneer-breakfast-recipes
Updated on

காலை உணவு ஆரோக்கியமானதாகவும், செய்ய எளிதாகவும் இருக்க வேண்டும் என்று யோசிப்பது எல்லாருக்கும் வழக்கம். ஆனால் எப்போதும் நமது மெனுவில் இடம் பெறுவது இட்லி, தோசை, உப்புமா மட்டுமே. ஆனா, அதிக மெனக்கெடாமல் கொஞ்சம் மெனுவை மாற்றி, உடலுக்கும் நல்லதா ஏதாவது சாப்பிடலாமே என்று தோன்றுகிறதா?

அப்படின்னா உங்களுக்கு புரதச்சத்து (protein) நிறைந்த பனீர் ஒரு அருமையான தேர்வு.

பனீர் சாப்பிட்டா சீக்கிரம் பசி எடுக்காது. ரத்த சர்க்கரையும் (sugar level) கட்டுப்பாட்டில் இருக்கும். அதாவது, காலை வேளையில் பனீர் சேர்த்த உணவுகளை சாப்பிட்டீங்கன்னா, உங்களால மதியம் வரை சோர்வு இல்லாம வேலையில் கவனம் செலுத்த முடியும். இப்போ, பனீரை எப்படி சுவையாக காலை உணவுல சேர்க்கலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பனீர் கடலை மாவு அடை

கடலை மாவில் அடை செய்து, அதில் பனீர் துண்டுகளை சேர்த்தால் புரதமும், நார்ச்சத்தும் இரண்டும் கிடைக்கும். இதை சாப்பிட்டா நீண்ட நேரம் பசி தெரியாது. டயட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு செம்ம option.

பனீர் + முளைகட்டிய பயறு சாலட்

“லேசா ஏதாவது சாப்பிடணும்”ன்னு நினைக்கிறவர்களுக்கு முளைகட்டிய பயறு, பனீர் சேர்த்து சாலட் பண்ணினா உடம்புக்கு தேவையான சத்து எல்லாம் கிடைக்கும். உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ரொம்ப உதவும்.

பனீர் வெஜிடபிள் கட்லெட்

கொஞ்சம் கிரிஸ்பியா சாப்பிட நினைக்கிறவர்கள் பனீர் கட்லெட் try பண்ணலாம். பனீர், பட்டாணி, மசாலா சேர்த்து செய்து, புதினா சட்னியுடன் சாப்பிட்டா சுவையே வேற லெவல்! ஏதாவது ஒரு காய்கறி அல்லது கீரைகள் கூட சேர்த்துக்கொள்ளலாம்.

பனீர் புர்ஜி + டோஸ்ட்

வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள் போட்டுட்டு பனீரை வதக்கி, மல்டிகிரெயின் டோஸ்டில் வைத்து சாப்பிட்டீங்கன்னா ரொம்ப சுவையாக இருக்கும். வயிறும் நிறையும். முட்டை ஸ்க்ராம்பிள் (Egg Scramble) மாதிரி சாப்பிடணும்னு நினைக்கிறவர்களுக்கு இது சரியான choice.

இதையும் படியுங்கள்:
நாவில் நீர் ஊற வைக்கும் 5 காரசாரமான மிளகாய் ரெசிபிகள்… உடனே ட்ரை பண்ணுங்க!
paneer-breakfast-recipes

கிரில் பனீர் சாண்ட்விச்

காலை நேரம் அவசரமா இருந்தா, கிரில் பனீர் சாண்ட்விச் ஒரு செம்ம எளிய மற்றும் சத்தான தேர்வு. பனீரை கொஞ்சம் உப்பு, மிளகு, லேசான மசாலா சேர்த்து கலக்கி, ரொட்டிக்குள்ள வைத்து டோஸ்ட் பண்ணினா சில நிமிஷத்துல ரெடி ஆகிடும். குடைமிளகாய், வெங்காயம் மாதிரி காய்கறிகளும் சேர்த்தீங்கன்னா சுவையும், சத்தும் இன்னும் கூடும்.

பனீர் பரோட்டா + தயிர்

பனீர் பரோட்டா என்பது வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு காலை உணவு. கோதுமை மாவில் பனீர் (கட்டி சீஸ்) நிரப்பி, லேசாக எண்ணெய் தடவி சுட்டு எடுப்பார்கள். இது சாப்பிட சுவையாக இருப்பதோடு, உடலுக்கு தேவையான புரதத்தையும் தரும். இதை ஒரு கப் குளிர்ந்த தயிருடன் சேர்த்து சாப்பிட்டால், செரிமானம் நல்லதாக இருக்கும். வயிறும் நீண்ட நேரம் நிறைந்த உணர்வை தரும். அதிக எண்ணெய் இல்லாமல் செய்தால் இது ஆரோக்கியமான மற்றும் சக்தி தரும் காலை உணவாக இருக்கும்.

நம்ம எல்லாரும் நினைப்பது என்னன்னா—“ஹெல்தி ஃபுட் என்றால் அது சுவையில்லாதது”ன்னு. ஆனா அது உண்மையில்லை. பனீர் மாதிரி புரத சத்து காலை உணவுல சேர்த்தா உடம்பு பலமாகும், பசி கட்டுப்படும் நாள் முழுக்க energy இருக்கும் அதனால், நாளைக்கு காலை முதல் ஒரு சின்ன மாற்றம் பண்ணிப் பாருங்க… உங்கள் வயிறும் மனமும் நிறைவாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com