
பீட்ரூட் ராய்தா
தேவை:
பீட்ரூட் - 1 கப் துருவியது
தயிர் - 1 கப்
தண்ணீர்
உப்பு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1/2 நறுக்கியது
கறிவேப்பிலை
செய்முறை:
ஒரு அகலமான பானில் துருவிய பீட்ரூட்டை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பின் சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். அடுத்து உப்பு சேர்த்து வதக்கவும். பீட்ரூட் வெந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
வேகவைத்த பீட்ரூட்டை தயிருடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு, பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு, கறிவேப்பிலை சேர்த்து, பின்பு பீட்ரூட் ரைத்தாவின் மீது தாளித்த பொருட்களை ஊற்றி கலக்கவும். சுவையான பீட்ரூட் ரைத்தா ரெடி.
******
முள்ளங்கி ராய்தா
தேவை:
முள்ளங்கி – ஒன்று,
இஞ்சி – சிறு துண்டு,
பச்சை மிளகாய் – ஒன்று, கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய், கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, தயிர் – ஒரு கப்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முள்ளங்கியை தோல் சீவி துருவவும். கொத்தமல்லி தழையுடன், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி சேர்த்து நைஸாக அரைக்கவும். தயிரை கெட்டியாக கடைந்து உப்பு, அரைத்து வைத்த விழுது, துருவிய முள்ளங்கி சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு… கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, முள்ளங்கி – தயிர் கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும். சுவையான முள்ளங்கி ராய்தா ரெடி.
*******
ஆலு ரெய்தா
தேவை:
உருளைகிழங்கு – 100 கிராம்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – 1 ஸ்பூன்,
கொத்தமல்லி, தயிர், கடுகு, உளுந்து – தேவைகேற்ப
கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை:
முதலில் உருளைகிழங்கை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை போட்டு தாளித்து அதில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு ஒரு நன்றாக கிளறவும். ஒரு பாத்திரத்தில் வதக்கிய உருளைக்கிழங்கு கலவை, உப்பு, தயிர் சேர்ந்து நன்றாக கலக்கவும். சுவையான ஆலு ரெய்தா ரெடி. இது சப்பாத்தி, சாம்பார் சாதத்திற்கு சுவையாக இருக்கும்.
******
வெள்ளரி ராய்தா
தேவை:
வெள்ளரிக்காய் – ஒன்று (துருவவும்),
தக்காளி – ஒன்று (நறுக்கவும்),
தயிர் – அரை கப்,
தனியா – சீரகப்பொடி – சிறிதளவு,
சர்க்கரை, உப்பு – தலா ஒரு சிட்டிகை.
செய்முறை:
தயிரை நீர் விடாது கடைந்து, துருவிய வெள்ளரிப் பிஞ்சு, நறுக்கிய தக்காளி, தனியா தூள், சீரகத்தூள், உப்பு , ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும். சுவையான குளு குளு வெள்ளரிப் பிஞ்சு ராய்தா ரெடி.