சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சுவையான ராஜ்மா குருமா & மசாலா!

Rajma Guruma & Masala!
Rajma Guruma & Masala!
Published on

பஞ்சாபி ராஜ்மா மசாலா

தேவை:

ராஜ்மா – ஒரு கப் 

எண்ணெய் – மூன்று டீஸ்பூன்

தக்காளி – இரண்டு (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய் தூள், தனியா தூள் – தலா ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து, நறுக்கியது)

அரைக்க:

மிளகு – அரை டீஸ்பூன்

இஞ்சி – ஒரு சிறு துண்டு

பூண்டு – ஐந்து பல்

தேங்காய் துண்டு, சின்ன வெங்காயம் – தலா கால் கப்

பெரிய வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)

சோம்பு – அரை டீஸ்பூன்

பட்டை, லவங்கம் – தலா இரண்டு

செய்முறை:

ராஜ் மாவை எட்டு மணி நேரம் ஊறவைத்து, வேகவைக்கவும். பின்னர் மேலே குறிப்பிட்ட அரைக்கக்கொடுத்துள்ள  அனைத்தையும் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்து, அரைத்த விழுது மற்றும் வேகவைத்த ராஜ்மா சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக கிளறவும்.

பின், சிறிதளவு தண்ணீர், கொத்தமல்லி, வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்கவிட்டு பத்து நிமிடம் கழித்து இறக்கவும். சுவையான ராஜ்மா மசாலா ரெடி.

ராஜ்மா பிரியாணி

தேவையானவை: 

பாசுமதி அரிசி - ஒரு கப், 

ராஜ்மா, 

நறுக்கிய வெங்காயத்தாள் - தலா கால் கப், 

பொடியாக நறுக்கிய இஞ்சி, எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: 

பட்டை - ஒரு துண்டு, 

பெரிய ஏலக்காய் - பாதி அளவு, 

மிளகு - ஒரு டீஸ்பூன், 

காய்ந்த மிளகாய் - 4.

இதையும் படியுங்கள்:
விருந்தினர் வியக்கும் 'ஸ்பெஷல்' சாலட் செய்வது எப்படி?
Rajma Guruma & Masala!

செய்முறை: 

கடாயில் எண்ணெய் விட்டு, வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, ஆறவைத்து, மிக்ஸியில் பொடிக்கவும். 

முதல் நாள் இரவே ராஜ்மாவை ஊற வைக்கவும். குக்கரில் கால் கப் தண்ணீர் விட்டு, ஊறவைத்த ராஜ்மாவைச் சேர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். அரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு... நறுக்கிய இஞ்சி, வெங்காயத்தாள் போட்டு நன்கு வதக்கவும். ஊற வைத்த அரிசியை (தண்ணீரை வடித்துவிட்டு) அதில் போட்டு, நன்கு வறுத்து... குக்கரில் உள்ள ராஜ்மாவுடன் சேர்க்கவும். பொடித்த மசாலாத்தூள், உப்புச் சேர்த்து, தண்ணீர் விட்டுக் கலந்து மிதமான தீயில் வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பரிமாறுவதற்கு முன் எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.

ராஜ்மா கோலா உருண்டை 

தேவை:

ராஜ்மா 1/2 கப்

பெரிய வெங்காயம் - 1

தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன் 

பொட்டுக்கடலை மாவு - கால் கப் 

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு  சோம்பு தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன் 

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை:

முதலில் ராஜ்மாவை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின் அதனுடன் ஊறவைத்த ராஜ்மாவை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

பின் இதனை‌ ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, சோம்பு தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும். பின் பொட்டு கடலை மாவு, நறுக்கிய கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.  பின் இந்த கலவையை கொஞ்சம் எடுத்து உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளாக உருட்டி வைத்த கோலா உருண்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.  சுவையான ராஜ்மா கோலா உருண்டை தயார்.

ராஜ்மா குருமா:

ராஜ்மா - தேவையான அளவு

வெங்காயம் - ஒன்று

தக்காளி -2

பட்டை, கிராம்பு, சோம்பு - தாளிக்க தேவையான அளவு

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் தனியா தூள் - ஒரு ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

தேங்காய்த்துருவல் - 5 ஸ்பூன் பூண்டு - 4 பல் 

இதையும் படியுங்கள்:
இனி மோர்க்குழம்பு போரடிக்காது... இதோ 4 ஸ்பெஷல் வெரைட்டிகள்!
Rajma Guruma & Masala!

செய்முறை:

ராஜ்மாவை கழுவி முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம் தக்காளி கருவேப்பிலை வதக்கவும்

பின்னர் கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்கள் மற்றும் தேங்காய் பூண்டு விழுதை சேர்க்கவும். ஊறவைத்த ராஜ்மா மற்றும் தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் குக்கரை மூடி 4 விசில் வேகவைத்து எடுத்தால் சூடான, சுவையான ராஜ்மா குருமா தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com