இந்தியன் ஸ்டைலில் Ratatouille.. இதன் சுவைக்கு நாக்கு நடனமாடுமே!

Ratatouille recipe.
Ratatouille recipe.

Ratatouille என்றாலே உங்களில் பெரும்பாலானவர்களுக்கு நியாபகம் வருவது, பிக்ஸார் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட ‘Ratatouille’ என்ற அனிமேஷன் திரைப்படம்தான். அந்த திரைப்படத்தின் சிறப்பே, ரெமி என்ற எலி, பாரிஸ் நகரின் தலைசிறந்த செஃப்பாக மாறுவதற்கு Ratatouille என்ற உணவை தயாரிக்கும். பல காய்கறிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த பிரஞ்சு நாட்டு உணவை, நமது ஊருக்கு ஏற்றார்போல எப்படி செய்யலாம் என இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு - 3

  • வெங்காயம் - 2

  • தக்காளி - 2

  • வெள்ளரி பழம் - 1

  • வெள்ளரிக்காய் - 1

  • கத்தரிக்காய் - 2

  • பச்சை ஆப்பிள் - 2

  • சாதம் - 1 கப்

  • பேபி கார்ன் - 1

  • காளான் - 4

  • சர்க்கரைவள்ளி கிழங்கு - 2

  • துருவிய சீஸ் - 3 ஸ்பூன் 

  • சில்லி ஃப்ளேக்ஸ் - 2 ஸ்பூன் 

  • நெய் - 3 ஸ்பூன் 

  • மிளகாய் தூள் - 2 ஸ்பூன் 

  • மிளகுத்தூள் - 2 ஸ்பூன் 

  • பூண்டு பொடி - 1 ஸ்பூன் 

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து மசித்துக்கொண்டு, அதனுடன் மிளகாய் தூள், உப்பு, பூண்டு பொடி, மிளகுத் தூள் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல நன்கு குழைந்த சாதத்தை உப்பு சேர்த்து மசித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

காய்கறிகள் அனைத்தையும் வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். பிறகு ஒரு குக்கரில் நெய் தடவி அடுப்பில் 10 நிமிடம் வரை சூடேற்ற வேண்டும். பின்னர் அதில் மசித்த உருளைக்கிழங்கை பரப்பி அதன் மேலே வட்டமாக வெட்டி வைத்துள்ள தக்காளியை வைக்கவும். 

இதையும் படியுங்கள்:
காளான் பயன்படுத்தி செய்யப்படும் சுவையான மூன்று ரெசிபிகள்!
Ratatouille recipe.

தக்காளிக்கு மேலே சாதத்தை வைத்து நன்கு அழுத்தம் கொடுத்து பரப்பி விடுங்கள். பிறகு சாதத்தின் மேலே சில்லி ஃபிளேக்ஸ் தூவுங்கள். அதன் மேலே வெட்டி வைத்துள்ள எல்லா காய்கறிகளையும் ஒன்றின் மேல் ஒன்றாக அழகாக அடுக்கி பரப்பவும். காய்கறியின் நடுவே பேபி கார்ன் மற்றும் காளானை வைக்கவும். 

இவை அனைத்திற்கும் மேலே துருவிய சீஸ் மற்றும் சில்லி ஃபிளேக்ஸ் கொஞ்சம் தூவுங்கள். அதன் பிறகு இவற்றை சுற்றி நெய் ஊற்றி, 30 முதல் 40 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக விட வேண்டும். அதன் மேலே உள்ள காய்கறிகள் லேசாக நிறம் மாறியதும் இறக்கினால் சுவையான Ratatouille ரெடி. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com