உண்மையான பனீரா? போலி பனீரா? கண்டுபிடிக்க எளிய வழிகள்!

Fake panneer
Fake panneer
Published on

சந்தையில் கலப்பட பனீர் விற்பனை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. போலியான பனீரை உட்கொள்வது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். சில எளிய சோதனைகள் மூலம் வீட்டில் போலி பனீரை கண்டுபிடிப்பது எப்படி என்று பார்க்கலாம்:

1. அமைப்பு (Texture):

  • உண்மையான பனீர் மிருதுவாகவும், இலகுவாகவும் இருக்கும். அதை அழுத்தும் போது உடையும்.

  • போலி பனீர் ரப்பர் போன்ற கடினமான அமைப்பைக் கொண்டிருக்கும். அழுத்தினாலும் உடையாது, மேலும் இழுத்தால் நீளும்.

2. நிறம் (Colour):

  • சுத்தமான பனீர் வெண்மை அல்லது லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

  • போலி பனீர் வழக்கத்திற்கு மாறாக அதிக வெண்மையாக இருக்கலாம்.

3. வாசனை (Smell):

  • நல்ல பனீர் லேசான பால் வாசனையுடன் இருக்கும்.

  • போலி பனீருக்கு எந்த வாசனையும் இருக்காது அல்லது ஒருவித ரசாயன வாசனை வீசலாம்.

4. கொதிக்கும் சோதனை (Boiling Test):

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் பனீர் துண்டுகளைப் போடுங்கள்.

  • உண்மையான பனீர் மென்மையாக இருக்கும்.

  • போலி பனீர் ரப்பர் போல கடினமாகவோ அல்லது உடைந்தாலோ அது கலப்படமானது.

5. அயோடின் சோதனை (Iodine Test):

  • கொதிக்க வைத்த பனீர் துண்டுகளை ஆற வைத்து, அதில் சில துளிகள் அயோடின் கரைசலை விடுங்கள்.

  • பனீர் நீல அல்லது கருப்பு நிறமாக மாறினால், அதில் ஸ்டார்ச் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். உண்மையான பனீர் நிறம் மாறாது.

6. கைகளால் மசித்தல் (Mashing Test):

  • சிறிது பனீரை கையில் எடுத்து மசிக்கவும்.

  • உண்மையான பனீர் எளிதில் உதிரும்.

  • போலி பனீர் கையில் வழுக்கிக் கொண்டு போகும்.

இந்த எளிய சோதனைகள் மூலம் நீங்கள் வாங்கும் பனீர் உண்மையானதா இல்லையா என்பதை ஓரளவுக்கு கண்டறியலாம். முடிந்தவரை நம்பகமான கடைகளில் பனீர் வாங்குவது நல்லது.

இதையும் படியுங்கள்:
டீ டைம் ஸ்பெஷல்: வீட்டில் செய்த காம்போ குக்கீஸ்!
Fake panneer

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com