பச்சை பட்டாணி பூரி - தித்திப்பு பேரீச்சம் பழ சட்னி - சூப்பர் காம்போ!

Green peas poori.
Green peas poori.
Published on

இந்த குளிர் காலத்தில் மட்டர் (பச்சை பட்டாணி) மிகவும் fresh ஆக கிடைக்கும். இந்த ஸீஸனில் டின்னருக்கு இந்த stuffed matar puri சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும்.

Stuffed puri செய்முறை:

தேவையான பொருட்கள் (for stuffing) :-

பச்சை பட்டாணி - 500g

பட்டை - ஒரு பெரிய துண்டு

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறிய துண்டு

இலவங்கம் - 2 பல்

கடலை மாவு – சிறிதளவு

கடலை மாவைத் தவிர பாக்கி எல்லாவற்றையும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் ஒரு spoon எண்ணெய் ஊற்றி அதை உப்பு சேர்த்து கிளறவும். மிதமான தீயில் கிளற வேண்டும். சிறிது கட்டியான பிறகு கடலை மாவைத் தூவி நன்றாக கலக்கவும். அடுப்பை அணைக்கவும். Stuffing ரெடி ஆகி விட்டது.

பூரிக்கு நீங்கள் கோதுமை மாவை அல்லது மைதா மாவை அல்லது இரண்டையும் கலந்து பிசைந்து கொள்ளலாம். மாவு பிசையும் போது சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிசையவும். மாவு சிறிது நேரம் ஊறிய பின் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
வித்தியாசமான காலிஃப்ளவர் பிரியாணி மற்றும் புடலங்காய் ரிங்ஸ்!
Green peas poori.

முதலில் பூரி அளவிற்கு இடவும். பிறகு அதில் stuffing மசாலாவை spoon ஆல் நிரவி, மூடி மறுபடியும் பூரி அளவிற்கு இடவும். மசாலாவை அதிகம் வைக்காதீர்கள், அதிகமாக வைத்தால் இடுவது கடினம். பிறகு அதை வாணலியில் பொரிக்கவும்.

இந்த பூரியை சுடச்சுட சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

இப்போது இதற்கு ஏற்ற sweet chutney ரெசிபியை பார்ப்போம்:

புளி கரைசல் - ஒரு சிறிய எலுமிச்சைம் பழம் அளவிற்கு புளியை ஊற வைத்து கரைசலை எடுத்து கொள்ளவும்.

பேரீச்சம் பழம் - 10 (கொட்டையை நீக்கி பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்)

தக்காளி - 4 medium size (பொடியாக நறுக்கி கொள்ளவும்)

வெல்லம் - 100g

கடுகு, கருஞ்சீரகம், வெந்தயம், சோம்பு, சீரகம் மற்றும் மஞ்சள் பொடி – தலா ¼ spoon

மிளகாய்த் தூள் – ½ spoon

செய்முறை:

அடுப்பை மூட்டி வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கருஞ்சீரகம், வெந்தயம் மற்றும் சோம்பை போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய தக்காளியையும் பேரீச்சம் பழத்தையும் போட்டு மஞ்சள் பொடியையும் தூவி வதக்கவும். ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ½ spoon மிளகாய்த் தூளையும் சேர்க்கவும். நன்றாக வதங்கிய பின் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும். சிறிது நேரம் கொதித்த பிறகு வெல்லத்தை தூளாக்கி அதில் கலக்கவும். எல்லாம் ஒன்று சேரும் வரை கலக்கவும்.

இதையும் படியுங்கள்:
4-வது டி20: இங்கிலாந்தை வீழ்த்தி T20 தொடரை கைப்பற்றிய இந்தியா அணி
Green peas poori.

வாயில் போட்டு பாருங்கள், உங்களுக்கு இன்னும் இனிப்பு தேவைப்பட்டால் கொஞ்சம் வெல்லத்தை இடித்து சேர்க்கவும். நன்றாக கலந்த பின் அடுப்பை அணைக்கவும். Sweet chutney ready.

இந்த சட்னி இனிப்பாகவும் இருக்கும், புளிப்பாகவும் இருக்கும். ஒரு பக்கம் சிறிது காரமாகவும் இருக்கும். சாப்பிடுவதற்கு tasty ஆக இருக்கும்.

Stuffed Matar Puri with Sweet Chutney is a good combination. Try பண்ணிவிட்டு சொல்லுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com