
இன்றைக்கு சுவையான பாஸ்தா பாயாசம் மற்றும் சாக்லேட் ஓட்ஸ் பிஸ்கட் ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
பாஸ்தா பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்தா - 1 கப்
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 1 கப்
கஸ்டர்ட் பவுடர் - 4 தேக்கரண்டி.
நெய் - 2 தேக்கரண்டி.
முந்திரி - 10
திராட்சை - 10
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
நட்ஸ் - தேவையான அளவு
பாஸ்தா பாயாசம் செய்முறை விளக்கம்.
முதலில் 1 கப் பாஸ்தாவை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்றாக வேக வைத்து அலசி எடுத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் 2 தேக்கரண்டி நெய் விட்டு 10 முந்திரி, 10 திராட்சையை நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது அதே கடாயில் பாஸ்தாவை சேர்த்து பால் 1 லிட்டர் சேர்த்துக் நன்றாக கொதிக்க விடவும். 4 தேக்கரண்டி கஸ்டர்ட் பவுடரில் பால் சிறிது சேர்த்து கலந்துவிட்டு அதை பாலில் ஊற்றி விடவும். இத்துடன் 1கப் சர்க்கரையை சேர்த்து வாசனைக்காக ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி, வறுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்து விட்டு கடைசியாக பொடியாக நறுக்கிய நட்ஸ் சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால் பாஸ்தா பாயாசம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்க.
சாக்லேட் ஓட்ஸ் பிஸ்காட் செய்ய தேவையான பொருட்கள்:
வெண்ணெய் - 100 கிராம்
நாட்டுச்சர்க்கரை - 100 கிராம்
வெண்ணிலா எசென்ஸ் - 3 சொட்டுக்கள்
கோதுமை மாவு - 120 கிராம்
ஓட்ஸ் - 120 கிராம்
கொக்கோ பவுடர் - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
சாக்லேட் ஓட்ஸ் பிஸ்கட் செய்முறை விளக்கம்:
முதலில் பவுலில் 100 கிராம் உப்பு சேர்க்காத வெண்ணெய் எடுத்துக் கொண்டு அத்துடன் 100 கிராம் நாட்டுச்சர்க்கரை, 3 சொட்டு வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும்.
இப்போது இதில் 120 கிராம் கோதுமை மாவு, 120 கிராம் ஓட்ஸ், 1 தேக்கரண்டி கொக்கோ பவுடர், ¼ தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து கலந்துவிட்டு 3 தேக்கண்டி பால் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
இதை பட்டர் பேப்பரில் வைத்து நன்றாக திரட்டு எடுத்து அதை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி எடுத்து பேக்கிங் டிரேயில் வைத்து ஓவனில் 15 நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான சாக்லேட் ஓட்ஸ் பிஸ்கட் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிபே பாருங்க.