
இன்றைக்கு சுவையான மாம்பழ அல்வா மற்றும் வாழைத்தண்டு மசாலா வடை ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
மாம்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்.
நெய்-தேவையான அளவு
மாம்பழம்-2
சர்க்கரை-1 ½ கப்
குங்குமப்பூ-சிறிதளவு
சோளமாவு-1/4 கப்
பிஸ்தா-தேவையான அளவு
மாம்பழ அல்வா செய்முறை விளக்கம்.
முதலில் பேனில் 2 தேக்கரண்டி நெய் விட்டு அதில் 2 மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
இதை பத்து நிமிடம் வதக்கிவிட்டு 1½ கப் சர்க்கரை சேர்த்து கலந்துவிடவும். இப்போது ¼ கப் சோளமாவை தண்ணீரில் கலந்து அதையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
நெய் தேவையான அளவு சேர்த்துவிட்டு, குங்குமப்பூ சிறிதளவு சேர்த்து நன்றாக கிளறவும். கடைசியாக நறுக்கிய பிஸ்தாவை சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால் சுவையான மாம்பழ அல்வா தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
வாழைத்தண்டு மசாலா வடை செய்ய தேவையான பொருட்கள்.
வாழைத்தண்டு-1 கப்
கடலைப்பருப்பு-1 கப்
உப்பு-தேவையான அளவு
பெருங்காயம்-1/2 தேக்கரண்டி
வரமிளகாய்-4
சோம்பு-1 தேக்கரண்டி
துவரம் பருப்பு-1/4 கப்
பச்சை மிளகாய்-2
வெங்காயம்-1
பூண்டு-10
இஞ்சி- 1 துண்டு
கருவேப்பிலை-சிறிதளவு
கொத்தமல்லி-சிறிதளவு
எண்ணெய்-தேவையான அளவு
வாழைத்தண்டு மசாலா வடை செய்முறை விளக்கம்.
முதலில் வாழைத்தண்டை தூளாக நறுக்கி விட்டு அதை மோர் தண்ணீரில் சேர்த்துவிட்டு பிறகு எடுத்து டிஸூ பேப்பரில் பரப்பி வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஊற வைத்த கடலைப்பருப்பு 1 கப், துவரம் பருப்பு ¼ கப், வரமிளகாய் 4, சோம்பு 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பவுலில் அரைத்து வைத்திருக்கும் மாவு, சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, தோலுடன் இடித்து வைத்திருக்கும் பூண்டு 10, பொடியாக நறுக்கிய இஞ்சி 1 துண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு, பெருங்காயம் ½ தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக வாழைத்தண்டை இத்துடன் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் செய்து வைத்திருக்கும் மாவை தட்டி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்தால் சுவையான வாழைத்தண்டு மசால் வடை தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.