Delicious Dishes, Rasams and Recipes in Mango!
mango recipes

வடுமாங்காயில் சுவையான துவையல், ரசம், ரெசிபிக்கள்!

Published on

வடுமாங்காய் துவையல்

தேவையான பொருட்கள்:

வடுமாங்காய் – 1 (சிறியதாக நறுக்கியது)

பச்சைமிளகாய் – 3

சீரகம் – 1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் _ 3 ஸ்பூன்

இஞ்சி _ஒரு சிறு துண்டு

பூண்டு _ 2 பற்கள்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

கடுகு – ½ டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 1 சிறு கொத்து

செய்முறை:

ஒரு கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அதில் பச்சைமிளகாய், சீரகம், இஞ்சி, பூண்டு மற்றும் வடுமாங்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும். மாங்காய் வதங்கி வந்ததும் அதனைத் தட்டி வைக்கவும். பின்னர் வறுத்த பொருட்களை தேங்காய் துருவல், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். போதிய அளவு தண்ணீர் சேர்த்து மையமாக அரைக்கவும்.

அதே கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, மற்றும் கறிவேப்பிலை தாளித்து, அரைத்த துவையலில் சேர்க்கவும்.

இந்த துவையலை சாதத்துடன் அல்லது இட்லி, தோசை, போன்றவற்றுடன் பரிமாறலாம்.

வடுமாங்காய் ரசம்

தேவையான பொருட்கள்:

வடுமாங்காய் – 1 (சிறியதாக நறுக்கியது)

துவரம்பருப்பு – ¼ கப்

தக்காளி – 1 (அரைத்தது)

மிளகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

பொடியாக நறுக்கிய மல்லி இலை – ¼ கப்

கறிவேப்பிலை – 1 சிறு கொத்து

பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்

பொரிகடலைப்பொடி – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – ½ டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

சுடுநீர் _தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
வேற லெவல் சுவையில் கொய்யாப்பழ அல்வா-பாசந்தி செய்யலாமா?
Delicious Dishes, Rasams and Recipes in Mango!

செய்முறை:

துவரம்பருப்பை நன்றாக கழுவி, 1 கப் தண்ணீரில் வேக வைத்து மசித்துவிடவும் வடுமாங்காய் துண்டுகளை, சிறிது தண்ணீரில் வேகவைத்து சாறு வடித்து. மிக்ஸியில் அரைத்து கொள்ளவும் பின்னர் மிக்ஸியில் மிளகு, சீரகம், மற்றும் பச்சை மிளகாயை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் அரைத்த மாங்காய் சாறு, தக்காளி சாறு, மசித்த பருப்பு, அரைத்த மசாலா, மஞ்சள்தூள், உப்பு, மற்றும் தேவையான அளவு சுடுநீரை சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை, மற்றும் மல்லிதழை தாளித்து, ரசத்தில் சேர்க்கவும்.

ரசத்தை சூடாக சாதத்துடன் பரிமாறவும். அல்லது சாறு மாதிரியாக குடிக்கவும் செய்யலாம்.

குறிப்பு: உளுத்தம்பருப்பை வறுத்துப் போடுவது ரசத்துக்கு தனி மணம் தரும்.

வடுமாங்காய் ஊத்தப்பம்

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு – 2 கப்

வடுமாங்காய் – 1 (துருவியது)

வெங்காயம் – 1 (நறுக்கியது)

பச்சமிளகாய் – 2 (நறுக்கியது)

இஞ்சி – 1- சிறு துண்டு (நறுக்கியது)

கறிவேப்பிலை – 1 கீத்து

நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவைக்கு

மிளகாய் பொடி – ½ மேசை பூண்டு பற்கள் – 2

இதையும் படியுங்கள்:
மூங்கில் குருத்து கூட்டு செய்யலாம் வாங்க!
Delicious Dishes, Rasams and Recipes in Mango!

செய்முறை:

இட்லி மாவினை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் உப்பும், வடுமாங்காயின் துருவலையும் சேர்த்து நன்கு கலக்கவும். அத்துடன் வெங்காயம், பச்சமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மற்றும் இவற்றை மாவில் சேர்க்கவும். தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி காய்ச்சி, மாவை ஒரு சிறு அளவு ஊற்றி, அடுப்பில் மெதுவாக சுடவும். சில நிமிடங்களில், ஊத்தப்பம் வெந்ததும், திருப்பி மற்றொரு பக்கம் வேக வைக்கவும். சூடாக பரிமாறவும். இது சாம்பார் மற்றும் கொத்தமல்லி சட்னியுடன் சுவையான உணவாக அமையும். தனியாகவும் வெறுமனே சாப்பிடலாம்.

logo
Kalki Online
kalkionline.com