சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், குடை மிளகாய், இவற்றில் எது அதிக ருசியும், சத்தும் நிறைந்தது?

healthy samayal tips
healthy samayal tips
Published on

தினசரி சமையலில் காரத்திற்காக பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், மிளகு, குடைமிளகாய் போன்றவற்றை சேர்க்கிறோம். இவை அனைத்துமே தனித்துவமான நன்மைகள் மற்றும் சாத்தியமான பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். 

சிவப்பு மிளகாய் பயன்பாடுகள்;

பருப்புகள், சூடான சாஸ்கள், சூப்புகள் போன்ற உணவுகளுக்கு காரத்திற்காக சிவப்பு மிளகாய் பயன்படுத்தப்படுகின்றன. இறைச்சி வகைகளில் ருசிக்காக காரத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது. ஊறுகாய் போன்ற செய்முறைகளுக்கு சிவப்பு மிளகாய் பொடி சேர்க்கப்படுகிறது. 

பச்சை மிளகாய் பயன்பாடுகள்;

புதிய வகை சாலடுகள் சீன அல்லது தாய் உணவு போன்றவற்றில் அதிகமாக சேர்க்கப்படுகிறது. வறுத்த உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. சட்னி வகைகள், கீரைக் கடைசல், மசியல், சீஸ் கலவைகளில் பயன்படுத்தப்படுகிறது.

கருப்பு மிளகு;

சூப்புகள் ஸ்டூக்கள், சாஸ்கள், இறைச்சி வகைகள், முட்டைப் பொரியல், ஆம்லெட்டுகளில் மிளகுத்தூள் சேர்க்கப்படுகிறது. ரசம், வெண் பொங்கல்  மற்றும் காய்கறிகளுக்கு மிளகுத்தூள் பயன்படுத்துகிறார்கள். 

குடை மிளகாய்;

சாலடுகளில் பச்சையாக பயன்படுத்தப்படுகிறது. காய்கறிகள் வதக்கும்போது இவற்றை சேர்க்கலாம். ஃப்ரைட் ரைஸ், சிக்கன் ரைஸ் போன்றவற்றில் கூடுதல் சுவைக்காகவும் நிறத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சோற்றுக்கு செம ஜோரான கருணைக்கிழங்கு காரக்குழம்பும் வறுவலும்..!
healthy samayal tips

பச்சை மிளகாயின் நன்மைகள்;

ஊட்டச்சத்துக்கள்; பச்சை மிளகாயில் விட்டமின் ஏ, சி, இ ஆகியவற்றுடன் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சருவ ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம். 

செரிமான ஆரோக்கியம்; இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

எடை இழப்பு;

பச்சை மிளகாயில் காப்சைசின் என்கிற பொருள் உள்ளது. இது வளர்சிதை  மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் கொழுப்பை எரிப்பதை ஊக்குவிக்கும். இதனால் எடை நன்றாக கட்டுக்குள் இருக்கும்.

வலி நிவாரணம்;  இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் உடல் வலியை நிவர்த்தி செய்யப் பயன்படுகிறது. 

பக்க விளைவுகள்;

இதை அதிகப்படியாக எடுத்துக்கொண்டால் வயிற்று வலி, அமில ரிஃப்லெக்ஸ் அல்லது வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும். சிலருக்கு ஒவ்வாமை தோல் எரிச்சல் இரைப்பை அழற்சி புண்கள் போன்றவை ஏற்படலாம்.

சிவப்பு மிளகாயின் நன்மைகள்;

விட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள சிவப்பு மிளகாய் தோல் ஆரோக்கியத்தைக் காக்கிறது. இதில் சிறப்பான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளதால் இது உடலுக்கு நன்மை பயக்கிறது. நாள்பட்ட நோய்களை தடுக்கவும், ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளை தடுக்கவும் உதவும் ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. இதிலுள்ள கேப்சைஸின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை நிர்வாகத்தில் உதவுகிறது. 

பக்க விளைவுகள்; இதை அதிகப்படியாக உட்கொண்டால் செரிமான மண்டலத்தில் வீக்கம் அல்லது எரிச்சலை ஏற்படுத்தும். சில நபர்களுக்கு ஒவ்வாமை எதிர்வினையை தூண்டலாம். 

இதையும் படியுங்கள்:
மைசூர் சில்க் கேள்விப்பட்டிருப்பீங்க… மைசூர் மல்லி அரிசி கேள்விப் பட்டிருக்கீங்களா?
healthy samayal tips

குடைமிளகாய் நன்மைகள்;;

ஊட்டச்சத்துக்கள் இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. விட்டமின் ஏ,சி மற்றும் கே1 அதிகம் உள்ளது. புற்றுநோய் மற்றும் இருதய பிரச்சனை போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க கூடியது. பல்வேறு ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்தது. இதில் உள்ள குறைந்த கலோரி உள்ளடக்கம் காரணமாக எடை மேலாண்மைக்கு ஏற்றது. எனவே எடை குறைய விரும்புபவர்கள் குடைமிளகாயை அடிக்கடி உணவு சேர்த்துக் கொள்ளலாம். 

பக்க விளைவுகள்; சில நபர்களுக்கு இதை அதிகமாக எடுத்துக் கொண்டால்  செரிமான கோளாறுகள் ஏற்படும். அரிதாக சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளையும் ஏற்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com