

சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீரை தவிர உடலுக்கு குளிர்ச்சி தந்து விரைவில் செய்யக் கூடியபானம் எனில் லஸ்ஸிதான். குளிர வைத்தோ, அப்படியே சாப்பிட சுவையாக இருக்கும்.
கெட்டித் தயிரை நன்கு மிக்ஸியில் விப்பர்மோடில் விட்டு விட்டு அடித்து சர்க்கரை, சேர்த்து அருந்துவதே லஸ்ஸி. சுவைக்காக க்ரீம், கோவா, மின்ட், எசென்ஸ் என சேர்த்து சுவை கூட்டலாம். சில லஸ்ஸி வகைகள் பார்க்கலாம் இந்த பதிவில்.
மாம்பழ லஸ்ஸி
தேவையானவை:
மாம்பழ கூழ்-2கப்கெட்டித் தயிர்-2கப், சர்க்கரை -3-4டீஸ்பூன், கனிந்த மாம்பழ துண்டுகள் அரிந்தது-1/4கப், ஐஸ் க்யூப்ஸ்
செய்முறை:
மாம்பழ கூழோடு, தயிர், சர்க்கரை, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து நுரைக்க மிக்ஸியில் அடிக்கவும். பரிமாறும் கிளாஸில் இதை ஊற்றி மேலாக மாம்பழ துண்டுகளை அலங்கரித்து பரிமாறவும். சுவையான மாம்பழ லஸ்ஸியை அனைவரும் விரும்புவர்.
பேடா லஸ்ஸி
தேவையானவை:
கெட்டித் தயிர்-3கப், உப்பு, சர்க்கரை -2டேபிள் ஸ்பூன் பால்பேடா அல்லது பால்கோவா-3-4, மில்க்மெய்ட்-3டீஸ்பூன், கிரீம் 1/2டீஸ்பூன்.
செய்முறை:
கிரீம் தவிர அனைத்தையும் மிக்ஸியில் போட்டு ஐஸ்க்யூப்ஸ் சேர்த்து நன்கு நுரைக்க அடிக்கவும். பரிமாறும் கிளாஸில் இதை ஊற்றி மேலாக கிரீம் அலங்கரித்து பரிமாற சுவையாக இருக்கும்.
குலாபி லஸ்ஸி
தேவையானவை:
கெட்டித் தயிர்-3கப், ஐஸ்க்ரீம் 3கரண்டி, ரோஜா குல்கந்து-2டீஸ்பூன், பன்னீர் சில துளிகள்.
செய்முறை:
கெட்டித் தயிரரை நுரைக்க மிக்ஸியில் போட்டு அடிக்கவும். பின் ஐஸ்க்ரீம், ரோஜா குல்கந்து, பன்னீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி பரிமாறும் கிளாஸில் ஊற்றி ரோஜா இதழ் தூவி அருந்த சூப்பராக இருக்கும்.
மின்ட் குக்கூம்பர் லஸ்ஸி
தேவையானவை:
புதினாஇலைகள்-1கைப்பிடி, வெள்ளரி-2, கெட்டித் தயிர்-2கப், உப்பு, மிளகுத்தூள் அல்லது ப மிளகாய் _2, கொத்தமல்லி இலை -கொஞ்சம்.
செய்முறை:
கெட்டி தயிருடன் உப்பு வெள்ளரி சேர்த்து நுரைக்க அடிக்கவும். புதினா அரிந்ததை, உப்பு, மிளகுத் தூளுடன் சேர்த்து அடித்து பரிமாறும் கிளாஸில் ஊற்றி மேலாக புதினா, மல்லி அலங்கரித்து பரிமாற சுவையாக இருக்கும்.
இதேபோல் பிடித்த பழங்கள் சேர்த்து லஸ்ஸி தயாரிக்கலாம். ரிச்சாக குழந்தைகளுக்கு கொடுக்க கட் பண்ணிய நட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாற சுவையாக இருக்கும்.
இவை யாவும் நான் வழக்கமாக வீட்டில் செய்து கொடுத்து சுவைப்பதை தொகுத்து எழுதியுள்ளேன். நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்களேன்.