புரட்டாசி ஸ்பெஷல்: ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா! 

Paneer Butter Masala
Paneer Butter Masala
Published on

புரட்டாசி மாதத்தில் பல்வேறு வகையான சைவ உணவுகள் தயாரிக்கப்பட்டு தெய்வங்களுக்கு படைக்கப்பட்டு குடும்பத்தோடு சேர்ந்து உண்ணப்படுகின்றன.‌ அந்த வகையில் இந்த புரட்டாசி மாதத்தில் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா தயாரித்து, வீட்டில் குடும்பத்தினருடன் உண்டு மகிழுங்கள். 

பனீர் பட்டர் மசாலா என்பது வட இந்தியாவில் தோன்றிய ஒரு பிரபலமான சைவ உணவு. பனீர் தக்காளி வெங்காயம் பூண்டு இஞ்சி போன்ற பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த உணவு, தனது தனித்துவமான சுவை மற்றும் மணத்தால் அனைவரையும் கவர்ந்திழுக்கும். பொதுவாக உணவகங்களில் மிகவும் சுவையாக தயாரிக்கப்படும் இந்த உணவை வீட்டிலேயே எளிமையாகத் தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்:

  • பனீர் - 200 கிராம் (கட்டியாக அல்லது துண்டுகளாக)

  • வெங்காயம் - 2 (நறுக்கியது)

  • தக்காளி - 2 (நறுக்கியது)

  • பூண்டு - 4-5 பற்கள் (பொடித்தது)

  • இஞ்சி - ஒரு துண்டு (பொடித்தது)

  • முந்திரிப் பருப்பு - 10-12

  • கடுகு - 1 தேக்கரண்டி

  • கறிவேப்பிலை - சிறிதளவு

  • சீரகம் - 1/2 தேக்கரண்டி

  • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

  • கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி

  • கசூரி மேத்தி - 1/2 தேக்கரண்டி

  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

  • கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி

  • தனியா தூள் - 1 தேக்கரண்டி

  • உப்பு - தேவையான அளவு

  • சர்க்கரை - 1/2 தேக்கரண்டி

  • வெண்ணெய் - 2 தேக்கரண்டி

  • எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கருவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து அதில் மசிக்கவும்.‌ அடுத்ததாக பூண்டு, இஞ்சி, மிளகாய் தூள், கரம் மசாலா, கசூரி மேத்தி, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், தனியா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். முந்திரிப் பருப்பை தனியாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து பொடித்து அந்த கலவையில் சேர்க்கவும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். 

இதையும் படியுங்கள்:
சூப்பரான சுவையில் பனீர் ரோல் செய்யலாம் வாங்க! 
Paneer Butter Masala

பனீர் துண்டுகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொதிக்கும் கிரேவிக்குள் சேர்க்கவும். இப்போது உப்பு, சர்க்கரை சேர்த்து சுவையை சரிபார்க்கவும். அடுத்ததாக கொதிக்கும் கிரேவியில் வெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். 

இறுதியாக கிரேவி கெட்டியான பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால், வேற லெவல் சுவையில் பனீர் பட்டர் மசாலா தயார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com