சத்தான 4 சிறுதானிய உணவு வகைகள்!

4 nutritious small grain foods!
healthy samayal recipes
Published on

வரகு அரிசி வெள்ளரிக்காய் அடை

தேவையான பொருட்கள்:

வரகரிசி - 1 கப்,

முளை கட்டிய பாசிப்பயறு, கொண்டைக்கடலை - தலா 1/2 கப்,

தோல் சீவி பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - 3/4 கப்,

வற மிளகாய் - 4,

இஞ்சி - சிறு துண்டு,

பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது,

நல்லெண்ணெய், கல் உப்பு - தேவைக்கு

செய்முறை:

முதலில் வரகரிசியை ஊறவைத்து அதில் பாசிப்பயறு, கொண்டைக்கடலை, வற மிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவேண்டும். முக்கால் பதம் அரைந்ததும், வெள்ளரிக்காயை மாவுடன் கலந்து, கல் உப்பு சேர்த்து அடைமாவு பதத்திற்கு அரைத்து நன்கு கலக்கவேண்டும்.

அதன்பின், கறிவேப்பிலை சேர்த்து, கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடையை தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுத்து பரிமாறலாம்.. சுவையான, சத்தான வரகரிசி வெள்ளரிக்காய் அடை தயார். இதற்கு தொட்டுக்கொள்ள சின்ன வெங்காய சட்னி சூப்பராக இருக்கும்.

வரகரிசி வேப்பம்பூ சாதம்

தேவை:

வரகு அரிசி – ஒரு கப்,

வேப்பம் பூ - அரை கப்

மாங்காய்ப் பொடி – 2 ஸ்பூன், முந்திரி – 10,

கடலைப் பருப்பு – 2 ஸ்பூன்

வற மிளகாய் – 4,

மிளகுத் தூள் – ஒரு ஸ்பூன், கடுகு, மல்லித்தழை – சிறிதளவு,

நெய் – 100 கிராம்,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வரகு அரிசியைச் சாதமாக வடித்துக்கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, கடுகு, கடலைப் பருப்பு, வற மிளகாயைத் தாளித்து, முந்திரி, வேப்பம்பூவைச் சேர்த்து வறுக்கவும். பின்னர் வரகு சாதத்தைப் போட்டுக் கிளறி, மிளகுத்தூள், மாங்காய்த் தூள், உப்பு சேர்த்து, நன்றாகக் கிளறவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கவும்.

இதையும் படியுங்கள்:
வெள்ளரிக்காய் அல்வாவும், உருளைக்கிழங்கு தோசையும்!
4 nutritious small grain foods!

வரகரிசி தட்டை

தேவை:

வரகரிசி - கால் கிலோ உளுந்து மாவு - 6 ஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன் மிளகாய்தூள் - 10 - 15

எள் - 2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் : 2 சிட்டிகை

உப்பு, எண்ணெய் :

தேவைக்கேற்ப

செய்முறை:

வரகரிசியை கழுவி, பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து மாவாக அரைக்கவும். அரைத்த மாவில் மிளகாய் தூள், எள், உளுத்தம் பருப்பு மாவு, நெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். சுத்தமான துணியில் உருண்டைகளாக உருட்டி, வட்டமாக தட்டவும். 2 நிமிடம் காயவைத்து, பின் எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுக்கவும். சுவையான வரகரிசி தட்டை தயார்.

வரகரிசி பர்பி

தேவை:

வரகரிசி மாவு - ஒரு கப்,

மில்க் பவுடர் - முக்கால் கப்,

கன்டன்ஸ்டு மில்க் - அரை கப்,

பசும் பால் - 50 மி.லி,

நெய் - இரண்டு ஸ்பூன்

வெண்ணெய் - இரண்டு ஸ்பூன்

முந்திரி, பாதாம் - தலா 5 (பொடித்தது)

இதையும் படியுங்கள்:
அசத்தலான அக்கிரொட்டியும், காரசாரமான புளிவடையும்!
4 nutritious small grain foods!

செய்முறை:

கடாயில் வரகரிசி மாவை சற்று வறுத்த பின், முந்திரி, பாதாம் பவுடர், பால் பவுடர், பால், கன்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும். நன்றாக சேர்த்து வந்ததும் நெய் சேர்த்து கிளறிவிடவும்.

பால்கோவா பதம் வந்தவுடன் இறக்கி தட்டில் வெண்ணெய் தடவி அதில் ஊற்றி பரவிவிடவும். பத்து நிமிடங்கள் கழித்து,சிறிய துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜ்ஜில் ஒருமணி நேரம் வைத்து எடுக்க,. சுவையான, சத்தான வரகரிசி பர்பி ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com