
ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு வகையான உணவுகள் இருக்கலாம். அரிசி, கோதுமை, பார்லி என பல வகைகள் உள்ளன.
உணவுக்கென்று வாழ்வில் மக்கள் மிகவும் சிரமப் பட்டாலும், முக்கியத்துவம் கொடுத்தாலும், கல்விக்காக பொருளாதார அடிப்படையில் உணவையும் கட்டுபடுத்தும் நிலையிலும் சிலர் உள்ளார்கள்.
உணவு எப்போதும் பிடித்தமானதாக, சுவையானதாக இருக்க விரும்புகிறோம். சுத்தமான, சத்தான உணவு என யோசிக்க மறந்துவிடுகின்றோம். காய்கறிகளில் சிலவற்றை சத்தான உணவாக எடுத்துக் கொள்ளும்போது உணவில் அரிசி சாதத்திற்கு அவியல் முதல் ஊறுகாய் வரை தேடுகின்றோம். சப்பாத்திக்கு குருமா போன்ற வகைகளும், ரொட்டி வகைகளுக்கு ஜாம் போன்ற பழத்தில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளும் வழக்கமான உணவாக்குகின் றோம். ஒரு உணவு தயாரிக்கும்போது தொட்டுக் கொள்ளும் கறி வகைகளை தொடர்பு உள்ளதாக சமைக்கவேண்டும். சப்பாத்தி என்றால் கிழங்கு குருமா, எலுமிச்சம் சாதம் என்றால் துவையல், புளியோதரை என்றால் சுண்டல் குழம்பு என்று தொடர்பு உடையதாக சமைக்கவேண்டும்.
இயற்கையிலே உணவு சுவையானது, எல்லா காய்கறிகளிலும் மேல் தோலுக்கு அடுத்தாற்போல் இருக்கும் உள் தோல் மிகவும் சத்தான தாகவும், சுவையானதாகவும் மணமானதாகவும், செய்யும் பொருளின் அளவை கூட்டுவதாகவும் அமையும்.
தன்மை என்பது பல வகையான மிளகு பொருட்களை அடக்கியது. அதற்கு ருசி என்பது உப்பும், புளியுமாகும். புளி சேர்க்காத இடம் எலுமிச்சம் பழம், மோர் சேர்ப்பது வழக்கம். தாளிக்கும் போது வாசனையானது, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு இவற்றோடு வத்தலும் சேர்ப்பதால் உருவாகிறது. இத்தனையும் சேராத சமையல் எடுபடாது.
நோயாளிகள் எண்ணெய் பலகாரங்களை குறைப்பதோடு உப்பு, எரிப்பு குறைப்பது நல்லது. எண்ணெயில் பொரிக்கும், பலகாரங்கள், காய்கறிகள் மிகவும் கேடு விளைவிப்பவை.
சமையலை பொறுத்தவரை வெல்லக்கட்டியை எடுத்துக் கொண்டால் இதனை ஒரு துளி பருவத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து பல வகையான மாவு பதார்த்தங்களை செய்யலாம். அதை பாயாசமாகவும் வைக்கலாம். இதில் சிறப்பாக கொழுக்கட்டை, முந்திரிகொத்து, அதிரசம், பலகாரம், அப்பம் போன்ற பண்டங்களும் செய்யப் படுகின்றன. பாசிப்பயறு சேர்ந்த பண்டங்கள் மிகவும் சுவையானவைகள். தின்பண்டங்களின் மென்மையைக் கூட்டுவதற்காக பால் அல்லது பழம் சேர்த்து கொள்வது வழக்கம்.
இறைவனுக்கு படைப்பதற்காக ஒரு அப்பம் செய்வது வழக்கம். பனைவெல்லத்தை சீவி அரிசிக்குப் பாதியாக எடுக்கவேண்டும். வாழைப்பழம், பனை வெல்லம், இரண்டையும் கலந்து அதோடு மாவு குறுணையையும் தண்ணீரில் பிசைந்து 4 மணி நேரம் ஊறவைத்து எண்ணெயில் ஊற்றி எடுப்பர். இதை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. எளியவர்களுக்கும் உகந்ததாகும்.
உணவில் ஒவ்வொரு நேர சாப்பாடும் அந்தந்த விதத்தில், தரத்தில் இருப்பது நல்லது. காலையில் சிற்றுண்டிக்கு பதில் மாலையில் சாப்பிடும் உணவை சாப்பிடுவது நல்லதாகாது. அதுபோல் சாப்பாடு என்பது அதிக காய்கறிகளோடு ஒரு பாத்திரம் அளவினதாக இருப்பதே நல்லது.
உணவில் பயிறு வகைகள், கிழங்கு வகைகள் போன்றவைகள் சக்தியை கொடுப்பவைகளாகவும், முட்டை பால், இறைச்சி போன்றவை வளர்ப்பவையாகவும், காய்கறிகள், பழவகைகள் போன்றவை பாதுகாப்பவைகளாகவும் மக்களுக்கு உபயோகப்படுகின்றன. பழச்சாறு அல்லது பழவகைகள் என்பது சாப்பிட்ட உணவில் கெடுதல்களை தணிப்பது, அழகை கொடுப்பது, உஷ்ணத்தை தணிப்பது, நோயை குறைப்பதுமாகும்.
உணவானது மனதுக்கு திருப்தியானதாக, சத்தானதாக, உடலுக்கு கெடுதல் இல்லாததாக இருக்கவேண்டும். இந்த உணவானது நோய் தீர்க்கும் மருந்து வகைகளோடு எப்போதும் உருவாக்கப்படுதல் அவசியமாகும்.