தீய்ந்த உணவின் வாடையை நீக்க முடியுமா? இதோ சமையல் மேதைகளின் ரகசியம்!

இனி சமையல் தீய்ந்துவிட்டது என்று தூக்கி எறிய வேண்டாம், இந்த எளிய மாற்றங்களை செய்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்|cooking tips
சமையல் குறிப்புகள்AI Image
Updated on

மையல் செய்வது ஒரு கலை என்றால் சில நேரங்களில் சமையல் செய்யும்போது ஏற்படும் தவறுகளை சரி செய்வதும் ஒரு விதத்தில் கலையாகவே பார்க்கப் படுகிறது. கவனக்குறைவாக சில நேரங்களில் சமையல் செய்யும்போது உணவு தீய்ந்து போனால் கெட்ட வாசனையின் காரணமாக தூக்கிப்போட நேரிடுகிறது. அந்த வகையில் தீய்ந்துபோன டிஷ்ஷை எந்தவித கெட்ட வாசனையும் இன்றி சரி செய்யும் எளிய டிப்ஸ்களை இப்பதிவில் காண்போம்.

1. பாலின் வாடையை மாற்ற உதவும் சமையல் குறிப்புகள்

பால் காய்ச்சும் போது எதிர்பாராத விதமாக அடிப்பிடித்துவிட்டால் பாலில் தீய்ந்த பகுதி தீயாத பகுதியுடன் கலக்காமல் பார்த்துக்கொண்டு உடனடியாக அதனை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். பிறகு வேறொரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சூடாக்கி சிறிய ஏலக்காய் 1, பெரிய ஏலக்காய் 1, கிராம்பு 3 சேர்த்து தாளித்து இதில் பாலை ஊற்றி அடுப்பை அணைத்துவிட்டு 4-5 மணி நேரங்கள் அப்படியே வைக்க பாலில் இருக்கும் தீய்ந்துபோன வாசனை காணாமல் போயிருக்கும்.

சமையல் குறிப்புகள்
சமையல் குறிப்புகள்AI image

2. பாயாசத்தின் தீய்ந்த மணத்தை போக்கும் சமையல் குறிப்புகள்

தீய்ந்து போன பாயாசத்தை முதலில் வேறொரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். பிறகு பச்சையாக இருக்கும் அழுகல் இல்லாத நல்ல வெற்றிலை இரண்டை எடுத்துக்கொண்டு அதனை பாயாசத்தில் போட்டு அடுப்பில் கொதிக்கவிட்டு வெற்றிலைகளை எடுத்து விட வேண்டும். வெற்றிலை தீய்ந்து போன வாசனையை முற்றிலும் குறைத்து இருப்பதை சிறிது நேரம் கழித்து உணரலாம்.

3. தீய்ந்து போன பருப்புக்கு சிம்பிள் டிப்ஸ்

பருப்பு தீய்ந்துவிட்டால் தீயாக பகுதியை தனியாக எடுத்து உடனடியாக வேறு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். ஒரு சுத்தமான பருத்தி துணியில் 4-5 டீஸ்பூன் சோம்பை கட்டி பருப்பில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவேண்டும். பருப்பில் சோம்பின் வாசனையும் சுவையும் கலந்து தீய்ந்து போன வாடை முற்றிலும் நீங்கி சோம்பின் நறுமணம் சேர்ந்து சாப்பிட ஏதுவாக இருக்கும் .மேலும் இதனுடன் 2-3 கிராம்பு சேர்க்க தனித்துவமான சுவையுடன் பருப்பு இருக்கும்.

4. காய்கறி பொரியல் தீய்ந்து விட்டால் எலுமிச்சம் பழமே தீர்வு

காய்கறி பொரியல் தீய்ந்து விட்டால் தீயாதப் பகுதியை எளிதாக பிரித்தெடுக்க அவசரப்படாமல் 5-7 நிமிடங்கள் அப்படியே நன்றாக மூடி வைக்க வேண்டும். இதனால் உருவாகும் நீராவியால் தனியாக இருக்கும் தீயாத பகுதியை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். இப்போது காய்கறிகளில் இருக்கும் தீய்ந்த வாசனையை போக்க எலுமிச்சை, தக்காளி, பிரஸ் க்ரீம், தயிர் இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்க்க வாசனை குறைந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
10 நிமிடத்தில் தட்டு காலி! மொறுமொறுப்பான ஹோட்டல் ஸ்டைல் க்ரிஸ்பி காலிஃபிளவர் மல்லிகை!
சமையல் குறிப்புகள்|cooking tips

5. நல்ல கிரேவியாக மாற்றும் வெங்காயம் தக்காளி விழுது

முற்றிலும் தீய்ந்து போன கிரேவியை சரி செய்ய தக்காளி, வெங்காய விழுதில் அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு அதில் தீயாத கிரேவி பகுதியை கலந்து ஐந்து நிமிடங்கள் வேக விட வேண்டும். இதனால் கிரேவி சுவையாக மாறுவதோடு தீய்ந்த வாசனை முற்றிலும் அகன்றுவிடும்.

உணவுப் பொருட்களை வீணாக்குவது முற்றிலும் தவறாகும். எதிர்பாராத விதமாக தீய்ந்து போகும் டிஷ்ஷில் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தினால் காய்ந்து போன வாசனையை முற்றிலும் அகற்றிவிடலாம். ஆகவே மேற்கூறிய எளிய டிப்ஸ்களை மனதில் வைத்து தீய்ந்து போன டிஷ்ஷை மாற்றி திருப்தியாக சாப்பிட்டு மகிழுங்கள்.

இதையும் படியுங்கள்:
கத்தரிக்காய் பிடிக்காதவங்களும் கேட்டு வாங்கி சாப்பிடும் சீக்ரெட் கத்தரிக்காய் சாதம்!
சமையல் குறிப்புகள்|cooking tips

உணவை வீணாக்காமல் தடுப்பதன் மூலம் உங்கள் வீட்டு பட்ஜெட் காக்கப்படுவதுடன், சமையலில் ஏற்படும் தவறுகளைச் சரிசெய்யும் உங்கள் தன்னம்பிக்கையும் சமையல் திறனும் அடுத்த கட்டத்திற்கு உயரும்.

logo
Kalki Online
kalkionline.com