பரிமாறுவது ஒரு கலை: விருந்தினர் மனதைக் கவரும் வழிமுறைகள்!

Guest hospitality
Serving is an art
Published on

"வாங்க பரிமாறலாம்" சமைப்பது ஒரு கலை என்றால் சமைத்த அயிட்டங்களை பாங்காக பரிமாறுவது அழகு. முதலில் குடும்பத்தினருக்கு பரிமாறுவது பற்றி பார்ப்போம்.

சில வீடுகளில் சமையல் பண்ணி எல்லாவற்றையும் மேஜை மேல் வைத்து விடுவார்கள். ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த நேரம், பிடித்த பதார்த்தங்களை தட்டில் வைத்துச் சாப்பிட்டுக் கொள்வார்கள். குடும்பத்தினர் அக்கறையும், அன்பும் கலந்து பரிமாற ரசித்துச் சாப்பிடும் குடும்பமும் உண்டு. இது தவிர விருந்தினரை பரிமாறி உபசரிக்க, அவர்களும் புசித்து புளகாங்கிதம் அடைந்து பாராட்டும்போது, மகிழ்ச்சியில் மனசுக்குள் பூச்சட்டி சொரியும். சரி...பரிமாறும் கலையைக் கொஞ்சம் சுவைக்கலாம் வாங்க…

விருந்தினருக்கு இலை போட்டு, பரிமாறப்போறீங்களா...? இலையை கழுவி துடைத்து விட்டு மேஜையின் மேல் வைக்கணும். சாப்பிட அமர்ந்த பின், இலையில் நீர் தெளித்து சுத்தப்படுத்தும்போது, நீர் தங்கிவிடும் வாய்ப்புகள் அதிகம். அதில், பதார்த்தங்களை பரிமாறும் போது, ருசி குறைந்துவிடும். அப்பளம், வடை போன்றவற்றில் கிரிஸ்பி போய்விடும்.

தட்டில், பரிமாறு முன்னர், தட்டை அலம்பி சுத்தமான டவல் அல்லது டிஷ்யூபேப்பரால் துடைத்துப் பயன்படுத்தவும். இலையை வைத்தவுடன் இடது ஓரமாக தண்ணீர் டம்ளரை இலையின் மேல் வைக்கவும். என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்குன்னு யோசனை வருதா? பின்னே, மின்விசிறியை ஆன் பண்ணுவீங்க இலை பறந்துவிடும். டென்சனாகிடுவீங்க..அதான் பறக்குமுன் தவிர்ப்போமே...

இதையும் படியுங்கள்:
சூடான, சுவையான கட்லெட்: நொறுக்குத் தீனிக்கு சிறந்த சாய்ஸ்!
Guest hospitality

எப்படி பரிமாறணும்..? முதலில் காலை டிபன். இட்லி, தோசை போன்ற மெயின் பதார்த்தங்களுடன் ஆரம்பிக்க வேண்டும். பின் சட்னியை இடப்புறம் வைக்கணும். கடைசியாக சாம்பார். சிலர் சாம்பாரை தொட்டு சாப்பிடுவார்கள். பலர் சாம்பாரால் இட்லியை குளிப்பாட்டி ருசிப்பார்கள். ஊற்றும்போது, எங்கு விடணும் எனக் கேட்பது உசிதம். தேவைப்பட்டால் மட்டுமே இட்லிப் பொடியை கேட்டு வைப்பது உசிதம். ஸ்வீட்டையும், வடையையும் இடப்புறம் வைப்பது நன்று. பொங்கல், பூரி போன்ற ஸ்பெஷல் அயிட்டங்களுக்கும் பொருந்தும்.

அடுத்து, மதிய உணவு. நம் பண்பாட்டு முறைப்படி, முதலில் இடது நுனியில் உள்பக்கம் ஸ்வீட். அடுத்து, எதிர் திசையில் உப்பு, ஊறுகாய். அடுத்து பொரியல், அவியல், கூட்டு, பச்சடி, பருப்பு, வைத்த பின் இடது நுனியில் அப்பளம் வைத்து, அதன் மேல் வடை வைக்கலாம். இடமிருந்து, திக்காக ஆரம்பித்து, திரவத் தன்மைக்கேற்றவாறு தொடர்ந்தால், கிரிஸ்பியும், சுவையும் மாறாது. சாதத்தை மொத்தமாக வைக்காமல், தேவைக்கேற்ப மீண்டும், மீண்டும் ரசம், மோர் சாதத்திற்கு வைத்தால் விருந்தினரின் முகம் மலரும்.

பாயாசத்திற்கு கப் பெஸ்ட். இப்பெல்லாம், நிறைய இல்லங்களில், டிஸ்போஸபிள் கப் ஸ்டாக் வைத்து இருக்கிறார்கள். சிரமம் பாராது, கொஞ்சம், கொஞ்சமாக திரும்பத் திரும்ப கேட்டு, பரிமாறினால் விருந்தோம்பல் சிறக்கும். இலையில் பரிமாறும் முறையிலேயே தட்டிலும் பரிமாறலாம். புன்னகையுடன் பரிமாறினால், விருந்தினர்கள் பாராட்டுவார்கள். மகிழ்ச்சி பெருகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com