குட்டி குட்டி சமையல் டிப்ஸ் பார்ப்போமா?

little cooking tips!
Samayal tips
Published on

ளுந்து வடை செய்யும்போது அரைத்த மாவுடன் சிறிது ஊற வைத்து பயத்தம் பருப்பை சேர்த்து கலந்து வடை செய்தால் வடை மெது மெதுவென்று சுவையாகவும் இருக்கும். 

இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பை ஊறவைத்து அரைத்து பஜ்ஜி செய்யுமாவில் கலந்து பஜ்ஜி செய்தால் சுவைமொறுமொறுப்பாக இருக்கும்.

தயிர் வடை செய்யும்பொழுது உளுத்தம் பருப்புடன் ஐந்து முந்திரிப் பருப்பையும் ஊறவைத்து அரைத்து செய்தால் மிருதுவாகும் ருசியாவும் இருக்கும். 

உருளைக்கிழங்கு சீக்கிரம் வேகவேண்டுமா  அதனுடன் சிறிதளவு மஞ்சள் பொடியும் எண்ணெய்யும் சேர்க்க வேண்டும். 

சிறிது எள் சீரகம் பெருங்காயப்பொடி பொட்டுக்கடலை சேர்த்து ஜவ்வரிசி வடகம் செய்தால் பொரித்து சாப்பிடும் பொழுது தட்டை போல சுவையாகவும் மணமுடனும் இருக்கும். 

தக்காளி சூப்பில் போட பிரெட் துண்டு இல்லையெனில் ஜவ்வரிசி வடாம் இருந்தால் பொரித்து சூப்பில் போட்டு சாப்பிடலாம்.

பர்பி மைசூர் பாகு ஜாங்கிரி போன்ற இனிப்பு வகைகள் தூளாக மிஞ்சிவிட்டதா கவலை வேண்டாம் இவற்றிற்காகவே போளி செய்து இனிப்பு துகள்களை பூரணத்துடன் கலந்து உபயோகிக்கலாம்.

வாழைக்காய் வறுவல் அல்லது உருளைக்கிழங்கு வறுவல் மீந்துவிட்டால் மசாலாக்களை வறுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும் வாழைக்காய் பொடி அல்லது உருளைக்கிழங்கு பொடி ரெடி.

பீட்ரூட்டை தோல் சீவி உளுத்தம் பருப்பு மிளகாய் பெருங்காயம் ஆகிவிட்டது வறுத்து தேங்காய் சேர்த்து அரைத்து கூட்டு செய்து சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளலாம் சுவையாக இருக்கும். 

இதையும் படியுங்கள்:
மசால் வடை சுடுகிறீர்களா? மொறு மொறுப்பான மசால் வடைக்கு சமையல் டிப்ஸ்…
little cooking tips!

பிரட்டின் மேல் பகுதியை அதாவது பழுப்பு நிற பகுதியை தனியாக எடுத்து மிக்ஸியில் அரைத்து அதில் பாதி அளவு அரிசி மாவு மற்றும் கடலை மாவு கலந்து இஞ்சி பச்சை மிளகாய் வெங்காயம் கருவேப்பிலை உப்பு சேர்த்து அப்பம் ஊற்றினால் சுவையாக இருக்கும். 

கோதுமை மாவை சூடான  வெறும் வாணலியில் போட்டு சிறிது நேரம் வறுக்க வேண்டும் ஆறினவுடன் உப்பு போட்டு பிசைந்து முறுக்கு பிழியும் அச்சில் இட்லி தட்டில் பிழிந்து ஆவியில் வேக விட வேண்டும் அருமையான கோதுமைமாவு சேவை ரெடி.

தேங்காய் சட்னி மணமும் சுவையும் கூடியிருக்க பச்சை மிளகாயையும் ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு எண்ணெயில் வதக்கி வறுத்து போட்டு பாருங்கள் மணம் வீட்டை தூக்கிவிடும். 

உருளைக்கிழங்கு வறுவல் நன்றாக மொறு மொறு வென்று வர வேண்டுமா உருளைக்கிழங்கு மெல்லியதாக வெட்டி உப்பு கலந்த நீரில் போட்டு வையுங்கள் சிறிது நேரம் சென்றதும் தண்ணீரை நன்றாக வடிகட்டி விட்டு பிறகு எண்ணெயில் வறுத்து எடுக்க வேண்டும் வறுவல் மொறு மொறு என்று இருக்கும்.

தேங்காய் சாதம் புளி சாதம் மாங்காய் சாதம் எலுமிச்சை சாதங்களுக்கு முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து சேர்த்தால் வாசனை தூக்கும் பார்வைக்கும் அழகாக இருக்கும். 

பூரி சப்பாத்திக்கு மாவு பிசையும்போது இரண்டு கைப்பிடி அளவு கடலை மாவையும் சேர்த்து பிசைந்துவிட்டால் போதும் ருசி பிரமாதமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
10 நிமிடங்களில் செய்யலாம் ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் சட்னி...
little cooking tips!

முட்டைக்கோஸில் துவையல் செய்தால் ருசியாக இருக்கும் கோஸை நன்றாக நறுக்கி கழுவி வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்க வேண்டும் அத்துடன் தேவையான அளவு உளுத்தம் பருப்பு பெருங்காயம் மிளகாய் வத்தல் பச்சை மிளகாய் சேர்த்து வறுத்து கொஞ்சம் புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் கோஸ் துவையல் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com