
மோர் குழம்பு செய்து இறக்குவதற்கு முன்பாக சிறிது தேங்காய் எண்ணெய்விட்டு இறக்கினால் அதன் ருசியே தனிதான்.
அவியல் ரெய்தா போன்றவற்றில் தயிர் சேர்ப்பதால் அவை விரைவில் புளித்துவிடும் இதை தடுக்க உபயோகிக்கும் போது உப்பு சேர்த்தால் சீக்கிரம் புளிக்காது.
பருப்பு உருண்டை குழம்பு தயாரிக்கும்போது உருண்டை கரையாமல் இருக்க வேண்டுமானால் ஒரு தேக்கரண்டி அரிசி மாவை உருண்டையுடன் உருட்டிபோட வேண்டும்.
காரக்குழம்பு வைக்கும்போது வெந்தயத்துடன் சிறிது துவரம் பருப்பையும் சேர்த்து தாளித்தால் மணமாக இருக்கும்.
மோர் குழம்புக்கு மசாலா அரைக்கும்போது தேங்காயை கொஞ்சம் குறைத்துக் கொண்டு கசகசா கடுகு போட்டு அரைத்து கலக்கினால் குழம்பு வாசனையடன் இருக்கும்.
வற்றல் குழம்பு செய்யும்போது குழம்பை இறக்கிய பின்பு ஒரு டீஸ்பூன் வறுத்த எள் பவுடர் போட்டால் நல்லெண்ணெய் வாசனையுடன் அருமையாக இருக்கும்.
காரக்குழம்பு செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பை வறுத்து இரண்டு மூன்றாக உடைத்து போட்டால் குழம்பு நன்றாக மணக்கும்.
பருப்பு உருண்டை குழம்பு செய்யும்போது உருண்டை கரைந்து விடாமல் இருக்க சிறிது எண்ணெய்விட்டு அரைத்தவுடன் வாணலியில் ஐந்து நிமிடம் வதக்கி பின் அரிசி மாவு கலந்து உருட்டி நிறைய புளித்தண்ணீர் விட்டு தளதளவென்று கொதிக்கும்போது ஒவ்வொன்றாக போட்டால் கரையாது.
சாம்பார் வத்த குழம்பு ஆகியவற்றில் காரம் அதிகமாகிவிட்டால் நல்லெண்ணையை ஊற்றி கொஞ்சம் கொதிக்கவிட வேண்டும் காரம் குறைந்துவிடும் குழம்பின் வாசனையும் நன்றாக இருக்கும்.
நிறைய காய் கூட்டு எல்லாம்மிஞ்சிப் போனால் இவற்றை ஒன்றாக கலந்து கெட்டியாக புளியைக்கரைத்து சிறிது காரத்தூள் உப்பு சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிட வேண்டும் பிரமாதமான பொரித்த குழம்பு ரெடியாகிவிடும்.
மோர் குழம்பு வைப்பதற்கு மிளகாய் அரைக்கும்போது மிளகாயை நன்றாக வதக்கி பிறகு அரைத்தால் குழம்பு வெள்ளையாக இருக்கும் அரைப்பதற்கும் சுலபமாக இருக்கும்.
சாம்பார் கம கம என்று மணக்க வேண்டுமா ?சாம்பாரை இறக்குவதற்கு முன் ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு ஒரு டீஸ்பூன் மல்லி ஒரு காய்ந்த மிளகாய் பொடித்து சிறிது கரகரப்பாக அரைத்து கலக்கினால் சாம்பார் கமகமவெனஇருக்கும்.
காரக் குழம்பு வைக்கும்போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடி செய்து போட்டால் சுவையாக இருக்கும்.
வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் சேர்த்துவிட்டால் சாம்பார் கம கமவென்று வாசனையாக இருக்கும்.
வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு மஞ்சள் தூள் மிளகாய் வத்தல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.
பூண்டு குழம்பு மறுநாள் வைக்க நினைத்தால் முதல் நாளே பிரிட்ஜில் வைத்தால் தோல் உரிப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.
முருங்கை பூவை தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி மோர் குழம்பில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடுங்கள் அக்கம் பக்கம் வீடுகள்வரை வாசனை பரவும்.