பச்சைப் பட்டாணி மசாலா சாதமும் - உருளைக்கிழங்கு பொடி வறுவலும் செய்வோமா?

பச்சைப் பட்டாணி மசாலா சாதமும் - உருளைக்கிழங்கு பொடி வறுவலும் செய்வோமா?
Published on

ப்ப பாரு சாம்பார், ரசம் செய்து போர் அடித்து விட்டதா? சமையல் அறையில் நீண்ட நேரம் இருக்க பிடிக்கவில்லையா?  இந்த பச்சைப் பட்டாணி சாதத்தை உருளைக்கிழங்கு பொடி வறுவலுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். பிரியாணி தோத்து போகும் இதன் ருசியில். செய்துதான் பாருங்களேன்.

பச்சை பட்டாணி மசாலா சாதம்:

பாசுமதி அரிசி 1கப்

பச்சை பட்டாணி 1/2 கப்

வெங்காயம் 1

தக்காளி 1

உருளைக்கிழங்கு 2

இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

உப்பு தேவையானது

மஞ்சள் தூள் 1 ஸ்பூன்

மசாலா அரைக்க: 

பட்டை 2

சோம்பு 1/2 ஸ்பூன் 

கிராம்பு 4

ஏலக்காய் 2

தனியா 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் 2

முந்திரிப்பருப்பு 6

புதினா 1 கைப்பிடி

மிளகு 1/2 ஸ்பூன்

தாளிக்க:

சீரகம் 1 ஸ்பூன்

நெய் 2 ஸ்பூன்

பிரிஞ்சி இலை 1

முதலில் பாசுமதி அரிசியை நீரில் கழுவி 20 நிமிடங்கள் ஊறவிடவும். மிக்ஸி ஜாரில் பட்டை, சோம்பு, ஏலக்காய், கிராம்பு, தனியா,மிளகு  ஆகியவற்றை லேசாக சூடுசெய்து பொடித்துக் கொண்டு பச்சை மிளகாய், புதினா, முந்திரி பருப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு நைசா அரைத்துக்கொள்ளவும்.

குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய்விட்டு சீரகம், பிரிஞ்சி இலை தாளித்து சீரகம் பொரிந்ததும் மெல்லியதாக நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து உருளைக்கிழங்கு துண்டுகள், பச்சை பட்டாணியையும் சேர்த்து வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான ராகி சேமியா புட்டு - சுண்டக்காய் துவையல் ரெசிபிஸ்!
பச்சைப் பட்டாணி மசாலா சாதமும் - உருளைக்கிழங்கு பொடி வறுவலும் செய்வோமா?

சிறிது வதங்கியதும் அரைத்த மசாலாவை சேர்த்து, தேவையான அளவு உப்பும் போட்டு 1 1/2 கப் தண்ணீர்விட்டு கொதிக்க ஆரம்பித்ததும் ஊறிய பாசுமதி அரிசியை சேர்த்து கிளறி மிதமான சூட்டில் ரெண்டு விசில் வரும்வரை வைத்து இறக்கவும். பிரஷர் அடங்கியதும் திறந்து இரண்டு ஸ்பூன் நெய்விட்டு கிளறி பரிமாற ஆஹா என்ன மணம்! என்ன சுவை!

உருளைக்கிழங்கு பொடி வறுவல்:

உருளைக்கிழங்கு 1/4 கிலோ

கடலை மாவு  1/2 கப்

அரிசி மாவு 2 ஸ்பூன்

கார பொடி 1 ஸ்பூன்

கரம் மசாலா 1/2 ஸ்பூன்

பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

உப்பு தேவையானது

கறிவேப்பிலை சிறிது

இதையும் படியுங்கள்:
சுவையும் மணமும் தரும் தேங்காய்ப் பால் ரசம் எவ்வாறு செய்வது?
பச்சைப் பட்டாணி மசாலா சாதமும் - உருளைக்கிழங்கு பொடி வறுவலும் செய்வோமா?

உருளைக்கிழங்கை தோல் சீவி சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசிமாவு, உப்பு, மஞ்சள்தூள், காரப்பொடி, கரம் மசாலா, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து  பிசிறிக்கொண்டு அத்துடன் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளையும் சேர்த்து சிறிது நீர் தெளித்து கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை சிறிது சிறிதாக எடுத்து கிள்ளிப்போட்டு பொரித்தெடுக்கவும். கரகரப்பான உருளைக்கிழங்கு பொடி வறுவல் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com