வாயில் கரையும் எகிப்த்தியன் ஸ்வீட் முதல் காரசாரமான ரைத்தா வரை: ஈஸியான 2 ரெசிபிகள் இதோ!

raita-and-egyptian-koshari-dessert
raita-and-egyptian-koshari-dessert
Updated on

எளிமையாய் தயாரிக்கக் கூடிய ஒரு சிம்பிள் ரைத்தா ரெசிபி!

தேவையான பொருட்கள்:

1.கெட்டித் தயிர் 250 கிராம் 

2.பூண்டுப் பல் 5

3.லவங்கம் 2

4.கருப்பு மிளகு 3 டீஸ்பூன் 

5.சிவப்பு மிளகாய் வற்றல் பெரியது 1

6.பிளாக் சால்ட் சிறிது 

7.சீரகம் ½ டேபிள் ஸ்பூன் 

8.உப்பு தேவையான அளவு

9.எண்ணெய் தேவையான அளவு 

10.ஃபிரஷ் கொத்தமல்லி இலைகள் 10

செய்முறை:

தயிரை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, ஹேண்ட்  பிளெண்டரால் (Hand Blender) மிருதுவாகும் வரை கடைந்து கொள்ளவும். பூண்டுப் பற்களை சிறு சிறு துண்டுகளாக்கி தயிரில் சேர்த்துக்கலக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பிளாக் சால்ட் மற்றும் மிளகாய் வற்றல் ஆகியவற்றை எண்ணெயில் போட்டு வாசனை வரும் வரை மிதமான தீயில் வறுத்தெடுக்கவும்.

பின் அதை ஆறவைத்து, மிக்ஸியில் போட்டு மசிய பொடித்துக் கொள்ளவும். பிறகு அந்தப் பொடியையும், தேவையான அளவு உப்பையும் தயிருடன் சேர்த்து மெதுவாகக் கலந்துவிடவும். மேற் பரப்பில் கொத்தமல்லி இலைகளை கிள்ளிப்போட்டு அலங்கரிக்கவும். பிரியாணி, ரொட்டி, ஃபிரைட் ரைஸ் என எல்லா உணவுகளுக்கும் சைடு டிஷ்ஷாக எடுத்துக்கொள்ள ஏற்றது. ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து குளிரச் செய்தபின் பரிமாறுவது அவசியம்.

இதையும் படியுங்கள்:
ஒருமுறை இப்படி 'லகோரி' ஸ்டைல்ல பன்னீர் செஞ்சு பாருங்க, விரலையும் சாப்பிடுவாங்க!
raita-and-egyptian-koshari-dessert

க்ரீமி எகிப்த்தியன் ஸ்டைல் கோஷாரி டெஸ்ஸர்ட்  (Koshari Dessert) ரெசிபி!

தேவையான பொருட்கள்:

1. திக்கான குளிர்ந்த பால் 1கப்

2.கஸ்டர்ட் பவுடர் 2 டேபிள் ஸ்பூன் 

3.சர்க்கரை 3 டேபிள் ஸ்பூன் 

4.நன்கு கடைந்து (whipped) விட்ட கிரீம் 1 கப்

5.பொடியாக உதிர்த்த பிஸ்கட் 1 கப்

6.பொடிசா நறுக்கிய நட்ஸ்களின் கலவை 2 டேபிள் ஸ்பூன் 

7.உலர் திராட்சை 2 டேபிள் ஸ்பூன்

8.தேங்காய் பவுடர் (Desiccated Coconut) 1 டேபிள் ஸ்பூன்

9.சாக்லேட் சிரப் 2 டேபிள் ஸ்பூன்

10.செரி அல்லது நட்ஸ் அலங்கரிக்க தேவையான அளவு 

செய்முறை:

மூன்று டேபிள் ஸ்பூன் பாலில் கஸ்டர்ட் பவுடரை சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மீதியுள்ள பாலை ஊற்றி சர்க்கரையை அதில் சேர்த்து மிதமான தீயில் வைத்து சர்க்கரை முழுவதும் கரையும் வரை வைத்திருக்கவும். பிறகு அந்த சர்க்கரை பாகை கொஞ்சம் கொஞ்சமாக கஸ்டர்ட் பவுடர் கலந்த பாலுடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

பரிமாறுவதற்கு பயன்படுத்தும் கப்பில் முதலில் பிஸ்கட் பவுடரை ஒரு அடுக்கு போடவும். அதன் மீது வெது வெதுப்பான கஸ்டர்ட் கலவையை ஊற்றவும். பிறகு கடைந்து வைத்துள்ள க்ரீம் சேர்க்கவும். அதன் மேல் பொடித்த நட்ஸ்களை போடவும். அதற்கு மேலே உலர் திராட்சை மற்றும் தேங்காய் பவுடரை ஒன்றன் பின் ஒன்றாக தூவி வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
கெட் டு கெதருக்கு செம்ம ஹிட்! ஸ்டஃப்ட் தக்காளி, ஆந்திரா கொத்தவரங்காய் கிரேவி!
raita-and-egyptian-koshari-dessert

பின் இன்னொரு முறை இதே வழியை பின்பற்றி அடுக்குகளை (Layers) உண்டு பண்ணவும். பிறகு சாக்லேட் சிரப்பை உச்சிப் பகுதியில் தாராளமாக வழிந்தோடும் வரை ஊற்றவும். பிறகு ஒருமணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து குளிரவிடவும். கடைசியா செரி பழங்களால் அலங்கரித்துப் பரிமாறவும். 

லேயர் லேயராக அனுபவித்து சுவைத்து உண்பதற்கு  ஏற்ற அருமையான டெஸர்ட். செய்துதான் பாருங்களேன்!

logo
Kalki Online
kalkionline.com