உருளைக்கிழங்கை மணலில் வைத்தால் சீக்கிரமாக கெட்டுப்போகாது!

சமையலில் சில புதுமைகளை கையாண்டால் மட்டுமே உணவின் சுவையை கூட்டவும், சத்து நிறைந்ததாகவும் மாற்ற முடியும்.
சமையல் டிப்ஸ்
சமையல் டிப்ஸ்
Published on

கடினமான சமையலையும் எளிமையாகவும், சுவையானதாகவும் மற்றும் சத்து நிறைந்ததாகவும் மாற்றும் எளிய சமையலறை குறிப்புகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.

1. கத்தரிக்காய் கூட்டோ, பொரியலோ எது செஞ்சாலும் கொஞ்சம் கடலை மாவைத்தூவி மூன்று நிமிஷம் கழிச்சு இறக்குங்க. மணம் கமகம வென்று இருக்கும்.

2. கேக், பிஸ்கட்களை ஒரே பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால், பிஸ்கட் சீக்கிரம் நமத்து விடும். ஆகவே தனித்தனி பாத்திரங்களில் போட்டு வைக்க வேண்டும்.

3. உருளைக்கிழங்கை மணலில் வைத்தால் சீக்கிரமாக கெட்டுப்போகாது.

4. கடலை மாவு, அரிசி மாவு இல்லாவிட்டால் கோதுமை மாவிலும் சுவையான பஜ்ஜி செய்யலாம்.

5. பருப்புப்பொடி தயாரிக்கும் போது இரண்டு ஸ்பூன் ஓமம் சேர்த்து அரைத்தால் மணமாக இருக்கும். ஜீரணத்துக்கும் நல்லது.

6. மணத்தக்காளிக் கீரையை வதக்கி, கடலைப்பருப்பை வறுத்து அதையும் மிளகாய் வற்றல், புளி, உப்பு சேர்த்து துவையலாக அரைத்தால் சுவையாக இருக்கும்.

7. கார சுண்டலுக்கு இஞ்சி, பெருங்காயம் சேர்த்தும், இனிப்பு சுண்டலுக்கு சுக்கு சேர்த்தும் செய்ய வாயு பிரச்சனை ஏற்படாது.

8. வேக வைத்த உருளைக்கிழங்குடன் அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து ஓமப்பொடி பிழிந்து பாருங்கள், சுவை அள்ளும்.

9. கேரட் துருவலுடன் வெல்லம் சேர்த்து கெட்டிப்பாகு காய்ச்சி, அந்தப்பாகை வேகவைத்து எடுத்து, பொங்கலோடு கலந்து செய்தால் பொங்கல் மாறுதலான சுவையுடன் இருக்கும்.

10. எண்ணெய் ஜாடிகளை ஒரு எவர் சில்வர் தட்டில் வைத்து பயன்படுத்தினால் அந்த இடம் எண்ணெய் சிக்கு பிடிக்காது.

இதையும் படியுங்கள்:
இதோ உங்களுக்காக பயனுள்ள சில சமையல் டிப்ஸ்...
சமையல் டிப்ஸ்

11. வழக்கமாக தயார் செய்யும் சப்பாத்தி மாவுடன் துருவி வேகவைத்து மசித்த கேரட் மற்றும் சீரகப்பொடி சேர்த்து சப்பாத்தி செய்தால் சுவை அள்ளும்.

12. தக்காளி சாதத்தில் சிறிதளவு வெந்தயம், ஒரு துண்டு மஞ்சள், ஒரு துண்டு பெருங்காயத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து போட்டால் தக்காளி சாதம் மிகவும் டேஸ்ட்டாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com