வெள்ளை குருமா முதல் மொறுமொறு வடை வரை: பீட்ரூட்டில் இவ்வளவு வெரைட்டியா?

so much variety in beetroot
so much variety in beetroot
Updated on

பீட்ரூட் கிரேவி

நீளவாக்கில் பெரிய துண்டுகளாக நறுக்கிய பீட்ரூட் 1 கப்

எண்ணெய் தேவையான அளவு

மசாலா அரைக்க

பெரிய வெங்காயம் 1 no

கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு

தேங்காய் துருவல் அரைக்கப்

பட்டை சோம்பு கிராம்பு ஏலக்காய்

இஞ்சி ஒரு துண்டு

பூண்டு 10 பல்

சீரகம் மிளகு ஒரு டீஸ்பூன்

வரமிளகாய் 5 No

பெரிய தக்காளி 2 No

தாளிக்க:

கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு

பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்

மஞ்சள் தூள் கால் ஸ்பூன்

கரம் மசாலா தூள் ஒரு டீஸ்பூன்

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை;

முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து நறுக்கிய கொத்தமல்லி கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதங்கியதும் நறுக்கிய பீட்ரூட் துண்டங்களைப் போட்டு நன்கு வதக்கவும்.

5 நிமிடம் கழித்து அரைத்த விழுதை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் கரம் மசால் தூள் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு 10 நிமிடம் கொதிக்கவிடவும். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்

பீட்ரூட் வடை

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1 கப்

பீட்ரூட் சீவல் 1 கப்

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு 1 கப்

கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிது

சீரகம் ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் 6 No

கடலைப்பருப்பு 1 கப்

உளுத்தம்பருப்பு அரை கப்

உப்பு தேவைக்கேற்ப

எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு

கடலை பருப்பு உளுந்துப் பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும் ஊறிய பிறகு தண்ணீர் விடாமல் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சீரகம் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
வாயில் வைத்தால் வழுக்கிக் கொண்டு போகும்… கண்ணாடி போல ஜொலிக்கும் 'ரோஸ் அல்வா'!
so much variety in beetroot

ஊறவைத்த கடலைப் பருப்பில் ஒரு கைப்பிடி எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வெங்காயம் பீட்ரூட் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

அரைத்த மாவை பீட்ரூட் கலவையில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிடித்த உருண்டைகளை வடைகளாகத் தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மாலை நேரம் டீ உடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

பீட்ரூட் வெள்ளைக் குருமா

பீட்ரூட் சீவல் 1 கப்

இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் கால் ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

பால் ½ கப்

அரிசி மாவு அரைக்கப்

வறுத்து கொரகொரப்பாக பொடிக்க வேண்டிய பொருட்கள். (தண்ணீர் சேர்க்க கூடாது)

பொட்டுக்கடலை ½ கப்

சோம்பு ½ ஸ்பூன்

மிளகு சீரகம் ஒரு டீஸ்பூன்

இதையும் படியுங்கள்:
ஜிம்முக்கு போகாமலே ஃபிட்டாக இருக்கணுமா? இந்த 'ஸ்ப்ரவுட்ஸ் சாலட்' மட்டும் போதும்!
so much variety in beetroot

செய்முறை:

பீட்ரூட் சீவலுடன் அரைத்த பொடியை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் அரிசி மாவு உப்பு சேர்த்து நன்கு கிளறி தேவைப்பட்டால் நல்லெண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்து சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.

பிடித்த உருண்டைகளை இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமரில் வைத்து வேகவைக்கவும்.

ஒரு கப் தேங்காய் துருவல் + பச்சை மிளகாய் +சோம்பு+கசகச+ பூண்டு+இஞ்சி, சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

பத்து நிமிடம் கொதித்ததும் அதில் வேக வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து இறுதியாக சூடான பால் சேர்த்து கிளறி இறக்கவும்.

தாளிப்பு: தேங்காய் எண்ணெயில் சிறிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை தாளித்து, தயார் செய்த குருமாவில் ஊற்றி ஒரு ஸ்பூன் நெய் விட்டு பரிமாறவும்.

சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள பீட்ரூட் வெள்ளைக்குருமா ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com