அசத்தலான சுவைக்காக சில சமையல் குறிப்புகள்!

Recipes
For a wonderful taste
Published on

வாழைத்தண்டு பொரியல் செய்யும்போது ஒரு ஸ்பூன் பச்சரிசி, ஒரு ஸ்பூன் உளுந்து, நான்கு மிளகு. இரண்டு மிளகாய் வற்றலை வறுத்து பொடி செய்து தூவிக்கிளறி இறக்கினால் பொரியலின் சுவையே அலாதிதான்.

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிது சுக்குப்பொடி சேர்த்துப்பிசைந்தால் வாசனையாக இருக்கும் என்று மட்டுலல்லாமல் எளிதில் ஜீரணமும் ஆகும்.

சர்க்கரைப் பொங்கல் சூடாக இருக்கும்போதே அரைக்கப் தேங்காய்ப்பால் ஊற்றிக் கிளறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

ரசத்துக்குப் போட கொத்துமல்லி கைவசம் இல்லையா? கவலையை விடுங்கள். அதற்கு பதிலாக தனியாவை நெய்யில் வறுத்து ரசத்தில் போடலாம். ரசம் சுவையாக இருக்கும்.

வெங்காயத்தை ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி மிக்ஸியில் அரைத்துச் சேர்த்தால் சாம்பாரின் புளிப்புச்சுவை மட்டுப்படும்.

ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் அரிந்த கோவைக்காய் துண்டுகளை போட்டு ஒரு நிமிடம் மூடி வையுங்கள். பிறகு வடிகட்டி வதக்கினால் கொஞ்சம் எண்ணெயிலேயே கோவைக்காய் நன்றாக வதங்கிவிடும்.

ஜவ்வரிசியை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு அடை செய்யும்போது, சிறிது ஜவ்வரிசி மாவையும் சேர்த்துச் செய்தால் அடை மொறுமொறுவென்று இருக்கும்.

தோசை மாவு புளித்துப்போய்விட்டதா? அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை நறுக்கிச் சேர்த்து கடுகு தாளித்துப் போட்டு சுவையான ஊத்தப்பம் செய்யலாம்.

சப்பாத்தி மாவு இரண்டு கிண்ணம், ஒரு வாழைப்பழம், அரைக்கப் தயிர், உப்பு. மற்றும் தண்ணீர் சேர்த்துப் பிசைந்தால், செய்யும் சப்பாத்தி மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இரும்புக் கடாயை எளிதாக சுத்தம் செய்ய ஓர் எளிய முறை!
Recipes

குருமாவில் தேங்காய்க்கு பதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை கரகரப்பாக அரைத்துச் சேர்த்தால் குருமா வித்தியாச சுவையுடன் இருக்கும்.

காறல் வாடை வராமல் இருக்க சமைக்கும் எண்ணெயில் இரண்டு, மூன்று மிளகாய்வற்றலை போட்டு வைத்தால் போதும். வடைக்கு அரைக்கும்போது வடை மாவில் கொஞ்சம் தயிர் சேர்த்துப் பாருங்கள். செய்யும் வடை சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com