
எலுமிச்சை சாதம் செய்கையில் எலுமிச்சை சாறை நேரடியாக சாதத்தில் கலந்து விட்டு தாளிப்பு செய்து வறுத்த முந்திரி பருப்பு, வறுத்த வெந்தயம் பொடி தூவி கிளறி பரிமாற சுவையாக இருக்கும்.
லன்ச் பாக்ஸ் கட்டும்போது தோசை, இட்லி என கொடுக்காமல் நட்ஸ் புலாவ் வித் வெள்ளரி ரெய்த்தா, நெய் சாதம் வித் முட்டை கிரேவி என சத்தான காம்பினேஷன் ஆக கொடுக்க விரும்பி சாப்பிடுவர்.
ஸ்டஃப்ட் சப்பாத்தி செய்யும்போது உருளைக் கிழங்கு வேக வைத்ததுடன் பனீர் துருவல் அல்லது காய்கறிகள் துருவியது, அல்லது மேத்தி வதக்கியது, பாலக் வதக்கியதை சேர்த்து கலந்து செய்ய சுவையோடு சத்தும் சேரும்.
ப்ரெட் ஊத்தப்பம், ப்ரெட் பணியாரம் செய்கையில் ¼ பங்கு சத்து மாவு சேர்த்துக்கொள்ள சுவையாக இருக்கும்.
பால் சேர்த்து செய்யும் எல்லா ரெசிபிகளிலும் பாலை நன்றாக காய்ச்சி திக்காக்கி பின் சேர்க்க சுவை அதிகரிக்கும்.
குழந்தைகளுக்கு நெய் தோசை ஊற்றும்போது, கருவேப்பிலை, கொத்தமல்லி சட்னியை தோசை மேலாக பரத்தி ரோஸ்ட் ஆனதும் எடுக்க க்ரீன் தோசையை சட்னியுடன் விரும்பி சாப்பிடுவார்கள்.
சிப்ஸ், பொரியல் எதற்கும் உப்பு காரத்தை கலந்து வைத்துக் கொண்டு தூவி விட ஒரே சீராக பரவும்.தனித் தனியாக போட எல்லா இடங்களிலும் படாமல் இருக்கும்.
வெல்லத்தை பாகு காய்ச்சும்போது வடிகட்டி விட்டு கொதிக்கும் போது சுக்குப் பொடி, ஏலப்பொடி, நெய்யில் வறுத்த தே சீவலை போட்டு பதம் வந்ததும் இறக்கி வைக்கவும். இதை வெந்த இடியாப்பத்துடனோ, வெந்த புட்டு, ஆவியில் வேகவைத்த பாசிப்பயறில் சேர்த்து நன்கு கலந்து பரிமாற சுவையாக இருக்கும்.
எப்போது பூரி செய்தாலும் வழக்கமான ஆட்டா மாவுடன் சத்து மாவு கலந்து கொண்டு பூரியாக தேய்த்து நடுவில் ஸ்டஃப் செய்து பொரிக்க நன்றாக இருக்கும். ஸ்டஃபிங் கிற்கு நட்ஸ் சீவியதுடன், பேரீட்சை துருவியது, ஏலப்பொடி சிறிது வைக்கலாம். ஆவியில் வெந்த பாசிப்பயறு கொரகொரப்பாக மசித்து கொண்டு அதனுடன் மல்லி, மசாலா சேர்த்து ஸ்டஃப் செய்து பொரிக்க சூப்பராக இருக்கும்.