
சுவையான தென்னிந்திய ஃப்யூஷன்: பன் பரோட்டா மற்றும் தயிர் மசாலா கறி!
பன் பரோட்டா
ஒரு சுவையான தென்னிந்தியன் ஃப்யூஷன் டிஷ் ஆகும், சாதாரண பரோட்டாவை, வெஜிடபிள் மற்றும் பன்னீர் கலவையுடன் செய்து தோசைசட்டியில் பனியனாக சுடப்படும் ஒரு வகை. வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
பரோட்டாவுக்கு
மைதா மாவு _ 2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
மசாலா கலவைக்கு:
பன்னீர் – 200 கிராம் (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
குடமிளகாய் – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
மிளகாய்தூள் – ½ மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ மேசைக்கரண்டி
தனியாதூள் – ½ மேசைக்கரண்டி
கரம் மசாலாத்தூள் – ½ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மல்லி இலை – சிறிது
செய்முறை: மைதாவில் உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து தண்ணீர் விட்டு மென்மையாக பிசையவும். அரை மணி நேரம் மூடி வைத்துவிட்டு, உருண்டையாக செய்து, சப்பாத்தி போல் பரப்பவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுடவும்.
காய்ந்த வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு விழுதை வதக்கவும். வெங்காயம், தக்காளி, குடமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். மசாலா தூள்கள் (மஞ்சள், மிளகாய், தனியா) மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பன்னீர் துண்டுகளை சேர்த்து 3–4 நிமிடம் நன்கு கலக்கவும். இறுதியாக கொத்தமல்லி தூவி அரை நிமிடம் வைத்து இறக்கவும். ஒரு பரோட்டாவை பரப்பி, மசாலாவை நடுவில் வைத்து சுருட்டி மூடவும். (சாமோசா போல). மீண்டும் தவாவில் சிறிது எண்ணெய் விட்டு, இருபுறமும் மிதமான தீயில் சுடவும். மேலே தட்டு வைத்து நன்கு அழுத்தி வேகவைக்கவும்.
தயிர், சாஸ், அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம். இது ஒரு வேகமாக தயார் செய்யக்கூடிய டின்னர்.
பரோட்டா ரொட்டி வாங்கி இருந்தால் நேரடி மசாலாவுடன் சுடலாம்.
தயிர் மசாலா கறி
இது ஒரு சுவையான, மென்மையான மற்றும் தயிர் அடிப்படையிலான கிரேவி. இதை செய்ய
தேவையான பொருட்கள்:
தயிர் – 1 கப் (நன்கு அடித்தது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் – ½ மேசைக்கரண்டி
தனியாதூள் – 1 மேசைக்கரண்டி
கரம் மசாலா – ½ மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி – சிறிது
வெஜிடபிள்ஸ் (கேரட், பீன்ஸ், உருளை, குடமிளகாய்)
செய்முறை: தயிரை நன்கு அடித்து வைக்கவும். அதில் மஞ்சள், மிளகாய், தனியாதூள் கலந்து வைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் வதக்கவும். வெங்காயம் வெந்ததும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
தக்காளியை சேர்த்து நன்கு மசித்து வதக்கவும். தயிர் கலவையை மிக மெதுவாக ஊற்றி, அடிக்கடி கிளறி, குழம்பாக மாறும் வரை காய்ச்சவும். கடைசியாக உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும். பின்னர் வெந்த காய்கறிகளை சேர்க்கவும். 3–5 நிமிடம் மிதமான தீயில் வைத்துவிட்டு இறக்கவும்.
வெண் சாதம், ஜீரா ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, புலாவ், குஸ்கா முதலியவற்றுடன் பரிமாறலாம்.
தயிர் புளிக்காததாக இருக்க வேண்டும் தயிர் சேர்க்கும்போது ஜாஸ்தியாக கொதிக்க விடக்கூடாது.