குழந்தைகள் விரும்பிப் பருகும் சத்தான சம்மர் ஸ்பெஷல் மில்க் ஷேக்ஸ்!

special-fruit-milkshake-
special-fruit-milkshake-
கல்பனா ராஜகோபால்

கல்பனா எனும் நான் பள்ளிப் பருவத்திலிருந்தே என்னுள் இருக்கும் தமிழார்வத்தால் புத்தகம் வாசிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். என் கவிதைக்கு முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் பெற்று உள்ளேன். என் கவிதை முதன் முதலில் மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியாகி அதற்கு பரிசும் பெற்றேன். பணி ஓய்வுக்கு பிறகு என் எழுத்துப் பணியை கல்கி ஆன்லைனில் தொடந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு நல்கிய. கல்கிக் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Updated on

முலாம் பழம் மில்க் ஷேக்

கோடைக்காலம் என்பதால் முலாம் பழமும் தர்பூசணியும் எல்லா கடைகளிலும் பரவலாக கிடைக்கும். அதை வெறுமனே சர்க்கரை சேர்த்து ஜூஸாக குடிப்பதற்குப் பதிலாக இப்படி வித்தியாசமான சுவையில் மில்க் ஷேக் செய்து குடித்து பாருங்கள். முலாம் பழம் &தர்பூசணி மில்க் ஷேக்… இப்படி செய்து பாருங்கள்… குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க..!

இத்தனை நாள் இந்த டேஸ்டை மிஸ் பண்ணியதைக் நினைத்து வருத்தப்படுவீர்கள். சரி, எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

முலாம் பழம் மில்க் ஷேக் தேவையான பொருட்கள்:

முலாம் பழம் – 1

முந்திரி, வால்நட் – சிறிதளவு

காய்ச்சிய பால் – 1 டம்ளர்

வனிலா ஐஸ்க்ரீம் – தேவைக்கேற்ப

துருவிய பாதாம் – 2 ஸ்பூன்

சர்க்கரை – தேவைக்கேற்ப

இதையும் படியுங்கள்:
கனிந்த வாழைப்பழம் இருக்கா? பேக்கரி ஸ்டைல் பேன்கேக் 10 நிமிடத்தில் ரெடி!
special-fruit-milkshake-

செய்முறை:

முலாம் பழத்தின் சதைப்பகுதியை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதோடு முந்திரி, வால்நட், பால், ஐஸ்க்ரீம் மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான், ஷேக் தயார். தயாரான முலாம் பழ மில்க் ஷேக்கை ஜூஸ் கிளாஸில் ஊற்றி, அதன் மேல் துருவிய பாதாமை தூவி பரிமாறுங்கள்.

தர்பூசணி மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்:

தர்பூசணி பழம் (கொட்டை நீக்கியது) – 2 கப்

முந்திரி, உலர் திராட்சை – சிறிதளவு

காய்ச்சிய பால் – 1 டம்ளர்

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் – தேவைக்கேற்ப

துருவிய பாதாம் – 2 ஸ்பூன்

சர்க்கரை – விருப்பப்பட்டால் மட்டும்

செய்முறை:

தர்பூசணி பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கி வைக்கவும். பழத்தை பொடியாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து, முந்திரி, வால்நட், பால், ஐஸ்க்ரீம் மற்றும் (தேவையெனில்) சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் ஷேக் தயார்.

தயாரான தர்பூசணி மில்க் ஷேக்கை ஜூஸ் கிளாஸில் ஊற்றி, அதன் மேல் துருவிய பாதாமை தூவி பரிமாறுங்கள். ஜில்லென்று சுவையாக இருக்கும்!

logo
Kalki Online
kalkionline.com