
அனார்தனா சட்னி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.உலர்ந்த மாதுளை விதைகள் 2 டேபிள் ஸ்பூன்
2. சிவப்பு வெங்காயம் ½
3.ஃபிரஷ் புதினா இலைகள் ½ கப்
4.லெமன் ஜூஸ் 1 டேபிள் ஸ்பூன்
5.காஷ்மீரி ரெட் சில்லி 2-3
6.உப்பு மற்றும் தண்ணீர் தேவையான அளவு
7.ஒரு சிறு துண்டு இஞ்சி
8.பெருங்காயத் தூள் கால் டீஸ்பூன்
9.எண்ணெய் 4 டீஸ்பூன்
10.கடுகு அரை டீஸ்பூன்
11.கறிவேப்பிலை ஒரு இணுக்கு
செய்முறை:
உலர்ந்த மாதுளை விதைகளை தண்ணீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின் ஊறிய விதைகளை மிக்ஸியில் போடவும். அதனுடன் வெங்காயம், புதினா இலைகள், காய்ந்த சிவப்பு மிளகாய்கள், இஞ்சி, பெருங்காயத் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சட்னி பதத்திற்கு அரைத்தெடுக்கவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு கறிவேப்பிலை சேர்க்கவும். அவை வெடித்ததும் அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விடவும். பிறகு கடாயை அடுப்பிலிருந்து இறக்கி லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு கலக்கவும். அனார்தனா சட்னி ரெடி. இட்லி, தோசை, ரொட்டி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து உண்ண ஏற்ற சட்னி!
பியாஸ் சட்னி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.வெங்காயம் 1
2.தக்காளி 1
3.பச்சை மிளகாய் 2
4.இஞ்சி ஒரு சிறு துண்டு
5.வெஜிடேபிள் ஆயில் 2 டேபிள் ஸ்பூன்
6.சீரகம் 1 டீஸ்பூன்
7.கொத்தமல்லி இலைகள் ஒரு கப்
8.உப்பு தேவையான அளவு
9.லெமன் ஜூஸ் 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை நறுக்கி மிக்ஸியில் போடவும். அதனுடன் கொத்தமல்லி இலைகள், உப்பு சேர்த்து மசிய அரைத்தெடுக்கவும். பின் ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடானதும் சீரகத்தைப் போடவும்.
பின் அரைத்த விழுதைப்போட்டு நன்கு கலந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வைத்திருக்கவும். பின் அடுப்பிலிருந்து இறக்கி லெமன் ஜூஸ் கலந்து காற்று புகாத கண்ணாடி ஜாரில் போட்டு மூடி வைக்கவும். சாதம், டிபன் என எந்த வகை உணவுடனும் சேர்த்து உண்ண ஏற்றது.