

ஜவ்வரிசி இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது. ஜவ்வரிசியில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளிட்டவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது. இதனால் இதயநோய் ஏற்படுவதற்கான அபாயம் தடுக்கப்படுகிறது.
உடல் எடை குறையும். கர்ப்பிணிகளுக்கு ஜவ்வரிசி சேர்த்தால் கருவின் வளர்ச்சிக்கு உதவும். மூளையில் உள்ள நினைவுகளை செயல்படுத்தவும் உதவுகிறது.
ஜவ்வரிசி வடை
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி- 1 கப்
உருளைக் கிழங்கு- 2 No
பச்சை மிளகாய்- 4 No
இஞ்சி- 1 துண்டு
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி தழை
வேர்க்கடலை ஒரு கப்
எலுமிச்சை பழம்- அரை மூடி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஜவ்வரிசியில் ஒருமணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை மசித்து வேகவைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்க்கவும்.
சீரகம், உப்பு சேர்த்து, கொத்தமல்லி தழையையும் போட்டு, எலுமிச்சை பழத்தையும் பிழிந்துவிடவும்.
பின்னர் இந்த கலவையில் ஜவ்வரிசியைப் போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். அதில் ஒரு 2 spoon காய்ந்த எண்ணெயை ஊற்றி நன்கு கலந்துகொள்ளவும்
ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்யை ஊற்றி, அது காய்ந்ததும், மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
சூடான சுவையான ஜவ்வரிசி வடை தேங்காய்ச்சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
பூண்டு சட்னி
பூண்டு சட்னி செய்யத் தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 10
கருவேப்பிலை
நல்லெண்ணெய் - தேவையான அளவு
பூண்டு பல் - 20 பல்
வரமிளகாய் - 5 No
புளி ஒரு நெல்லிக்காய் அளவு
தாளிக்க:
கடுகு உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் வரமிளகாய் சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.
பின்னர், சின்னவெங்காயம், பூண்டு பற்களை சேர்த்து இரண்டு நிமிடம் பொன்னிறமாக வதக்கி ஆறவிடவும்.
வதக்கிய கலவை ஆறிய பின்னர் அதில் உப்பு மற்றும் புளி சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.
மீண்டும் கடாயை சூடாக்கி அதில் நல்லெண்ணெய் ஊற்றி. எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கிய பின்னர், அரைத்த பூண்டு விழுதை சேர்த்து கிளறவும் மிதமான தீயில் வைக்கவும்.
சட்னியில் இருந்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கினால் காரசாரமான கமகமக்கும் பூண்டு சட்னி தயார்.